திரும்பவும் அந்த விஷயங்களை செய்தும் கூட ஓடாமல் போன ஜெமினி கணேசன் படம்!.. வேற எந்த படத்துக்கும் இப்படி நடந்ததில்லை!.

Gemini Ganesan : எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் தோல்வி படம் என்பது நிச்சயமாக அமைந்துவிடும். அப்படியாக தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தவர் இயக்குனர் ஸ்ரீதர்.

அவருக்கு நடந்த ஒரு சம்பவம் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. பொதுவாக இயக்குனர்களை பொறுத்தவரையில் அவர்களது படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் திரைப்படத்தை இயக்குவார்கள். ஆனால் இயக்குனர் ஸ்ரீதரை பொருத்தவரை தயாரிப்பாளருக்கும் மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதில் முக்கியத்துவம் கொடுப்பார்.

sridhar
sridhar
Social Media Bar

அவர் தமிழில் இயக்கிய பல திரைப்படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் 1971ல் ஸ்ரீதர் இயக்கத்தில் அவளுக்கென்று ஒரு மனம் என்கிற திரைப்படம் படமாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஆர் முத்துராமன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

இரண்டு முறை எடுக்கப்பட்ட திரைப்படம்:

இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டது. ஹிந்தி சினிமாவை பொறுத்தவரை அங்கு வேற்று மொழி திரைப்படங்களுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. அவர்கள் பாலிவுட் முழுக்கவும் படத்தை வெளியிட மாட்டார்கள்.

முதலில் மும்பையில் படத்தை வெளியிடுவார்கள். மும்பையில் படம் வெற்றி அடைந்தால் மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு படம் விற்கப்படும். இந்த நிலையில் அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படம் எடுக்கப்பட்ட பிறகு அந்த திரைப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்களுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.

இதனை அடுத்து படத்தை எடிட் செய்து தருகிறேன் பிறகு வந்து பார்த்துவிட்டு முடிவை சொல்லுங்கள் என்று விநியோகஸ்தர்களிடம் கூறிய இயக்குனர் ஸ்ரீதர் பாதி படத்தை மாற்றி அமைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

அதற்குப் பிறகு அந்த படத்தை பார்த்த விநியோகஸ்தர்களுக்கு அந்த திரைப்படம் பிடித்து விட்டது. எனவே படம் ஹிந்தியில் வெளியானது ஆனால் இந்த திரைப்படம் அப்பொழுதும் வெற்றி அடையவில்லை. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு படத்திற்கு ஆகும் செலவை இந்த திரைப்படத்திற்கு செய்திருந்தார் ஸ்ரீதர்.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது தனது சினிமா வாழ்க்கையிலேயே மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் போனது அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படத்தில்தான் என்று கூறுகிறார்.