தமிழில் பிரபலமாக வருகிற பேய் படங்களில் சுந்தர் சியின் பேய் படங்கள் கொஞ்சம் முக்கியமானவை. வெகு காலங்களாக தமிழ் சினிமாவில் பேய் படங்கள் பெரிதாக வராமல் இருந்தப்போது மக்களுக்கு பேய் படங்கள் மீதும் அதிக ஆர்வம் உள்ளது என்பதை சந்திரமுகி திரைப்படம் நிரூபித்தது.
அதனை தொடர்ந்து பேய் படங்கள் நிறைய வர துவங்கின. அப்போது லாரன்ஸ் முனி திரைப்படத்தின் பாகங்களை துவங்கி வைத்தார். சுந்தர் சி அரண்மனை திரைப்படத்தின் பாகங்களை துவங்கி வைத்தார். அரண்மனை திரைப்படத்தை பொறுத்தவரை பொதுவாக ஒரு அரண்மனையில் ஒரு பெண் பேய் இருக்கும்.
அந்த பேயால் அரண்மனையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இருக்கும். பிறகு பேய்க்கு ஒரு பின்கதை இருக்கும். இப்படியாகதான் கதை இருக்கும். ஆனால் அரண்மனை 4 கதை அதிலிருந்து முற்றிலுமாக மாறியுள்ளது. கெட்ட சக்திகள் வாழும் ஒரு அரண்மனைக்கு தனது இரு குழந்தைகள் மற்றும் கணவனுடம் வருகிறார் தமன்னா.

அங்குள்ள அந்த கெட்ட சக்தி தமன்னாவையும் அவர் கணவரையும் கொன்று விடுகிறது. ஆனால் அதை ஒரு தற்கொலை மாதிரியாக அது உருவாக்கி விடுகிறது. இந்த நிலையில் விஷயத்தை கேள்விப்பட்ட தமன்னாவின் அண்ணனான சுந்தர் சி அது ஒரு தற்கொலை என்பதில் சந்தேகம் கொள்கிறார்.
எனவே உண்மையை கண்டறிய அந்த அரண்மனைக்கு வருகிறார். இந்த நிலையில் அந்த கெட்ட சக்தி தமன்னாவின் குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்கிறது. ஆவியாக இருக்கும் தமன்னா அந்த கெட்ட சக்தியை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்கிறார்.
இந்த நிலையில் தெய்வத்தின் சக்தியால்தான் அந்த கெட்ட சக்தியை அழிக்க முடியும் என்கிற நிலை வருகிறது. அதற்கு சுந்தர் சி உதவுகிறார். இதற்கு நடுவே இந்த கெட்ட சக்தி ஒரு மந்திரவாதியின் ஏவலால்தான் இங்கு வந்துள்ளது என தெரிகிறது. இந்த நிலையில் கதை நாயகனான சுந்தர் சி இவற்றை எல்லாம் சரி செய்வதே கதை என கூறப்படுகிறது.
இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் நன்றாக இருப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது இந்த திரைப்படம்.






