கோட் படத்தை என்னடா பண்ணி வச்சசிருக்கீங்க!.. போஸ்டரை பார்த்து அதிர்ச்சியான வெங்கட் பிரபு!..

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இதனையடுத்து தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட்.

கோட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களிலுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.

வழக்கமாக நகைச்சுவையாக வெங்கட் பிரபு ஏதாவது செய்வது வழக்கம். அப்படியாக இன்று ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில் டபுள் டக்கர் என்னும் படத்தின் போஸ்டர் இடம் பெற்றிருந்தது. அதில் அந்த பொம்மைகள் ஒரு ஆட்டின் மீது அமர்ந்திருப்பதாக போஸ்டர் இருந்தது.

Social Media Bar

அதை பதிவிட்ட வெங்கட் பிரபு என் ஆட்டை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இது தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது.