கமல் செஞ்ச அந்த காரியத்தால செம கடுப்புல இருந்தேன்!.. என்ன விட சின்ன நடிகர்கள் கூட அதை பண்ணல!.. மனம் வருந்திய நடிகர்!..
குழந்தை நட்சத்திரமாக கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் அறிமுகமாகி இப்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன்.
குழந்தை கதாபாத்திரமாக அவர் அறிமுகமானப்போதே அவர் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என்கிற ஆசை கமல்ஹாசனுக்கு தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கொண்டு வந்து கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

அப்படி அவர் கொண்டு வந்த ஒரு கதைதான் மகாநதி திரைப்படம். மகாநதி திரைப்படத்தை பொறுத்தவரை அதை ஒரு முறைக்கு மேல் பார்ப்பது கடினம். அந்த அளவிற்கு அதிக துயர காட்சிகள் கொண்ட திரைப்படமாக இது இருக்கும்.
இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் தலைவாசல் விஜய் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது கூத்துக்கட்டுபவனாக நான் அந்த படத்தில் வருவேன். அந்த காட்சியின்போது எனக்கு உடல் முழுவதும் கருப்பு நிறம் பூசிவிடுமாறு கூறிவிட்டார் கமல்ஹாசன்.
என்னை விட சின்ன கூத்து கலைஞர்களாக இருப்பவர்களுக்கு கூட அப்படி எதுவும் பூசப்படவில்லை. அந்த படப்பிடிப்பு இரு நாட்கள் நடந்தது. இரு நாட்களும் கமல்ஹாசன் மீது நான் சரியான கோபத்தில் இருந்தேன். பிறகு படம் வெளியானப்போது அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது.
அப்போதுதான் கமல் எதையும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்கிறார் என தெரிந்தது.