ஆபிஸ்க்குள்ளையே விடலை!.. மணிவண்ணன்கிட்ட போய் அப்படி பேசலாமா!.
தமிழ் இயக்குனர்களில் அரசியல் சார்ந்து அதிக சிந்தனை கொண்ட இயக்குனராக இருந்தவர் இயக்குனர் மணிவண்ணன். அவரது திரைப்படங்கள் பலவற்றிலும் அப்போதைய அரசியல் குறித்து பல விஷயங்களை மிக விரிவாக பேசியிருப்பார்.
அதே மாதிரி யாராவது ஒரு நபர் குறித்து அவருக்கு மாற்று கருத்து இருந்தால் அதை அவர் முகத்திற்கு முன்பே கூறிவிடுவார் மணிவண்ணன். அப்படியாக ஒருமுறை கமல்ஹாசன் குறித்து கூட சர்ச்சைக்குரிய விமர்சனத்தை அளித்திருந்தார் மணிவண்ணன்.
மணிவண்ணன் நூறாவது நாள் திரைப்படத்தை இயக்கி வந்தப்போது அந்த திரைப்படத்திற்கு நடிப்பதற்கு நடிகர்கள் தேவை என கூறியிருந்தார். அந்த சமயத்தில்தான் நடிகர் தலைவாசல் விஜய் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு நடிப்பதற்கு வாய்ப்பு தேடி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த விளம்பரத்தை பார்த்த அவர் மணிவண்ணனிடம் வாய்ப்பு கேட்கலாம் என முடிவு செய்தார். எனவே மணிவண்ணனை நேரில் சந்திக்க சென்றார். ஆனால் அங்கு நின்ற காவலாளி அவரை உள்ளேயே அனுமதிக்கவில்லை. அதன் பிறகு தலைவாசல் விஜய் திரைப்பட கல்லூரியில் இருந்து வந்திருப்பதாகவும் மணிவண்ணனை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன் பிறகு உள்ளே சென்ற வாட்ச்மேன் மணிவண்ணனிடம் கேட்டுவிட்டு தலைவாசல் விஜய்யை அனுமதித்தார். அங்கு சென்ற தலைவாசல் விஜய் மணிவண்ணனிடம் ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார். இதனால் கடுப்பான மணிவண்ணன் ஏன் உனக்கு தமிழ் தெரியாதா என கேட்டுள்ளார்.
அதற்கு பிறகு அவர் ஒருமுறை கூட தலைவாசல் விஜய்யை நடிப்பதற்கு அழைக்கவில்லையாம். இதனை தலைவாசல் விஜய் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.