முருகதாஸ்க்கு சோறு போடாதீங்க!.. சாப்பாட்டை கட் செய்த தயாரிப்பாளர்!.. விஜயகாந்த் இருக்கும்போதே இந்த கொடுமையா!.

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். அரசியல் சார்ந்து தனது திரைப்படங்களில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார். 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அஜித்.

அந்த படம் பெருமளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அதிகமான வரவேற்பை பெற்றார் ஏ.ஆர் முருகதாஸ். பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம்தான் ரமணா. விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

சாப்பாட்டு விஷயத்தில் அனைவருக்கும் பாகுபாடு பார்க்காமல் உணவு அளிப்பவர் விஜயகாந்த். ஆனால் அவர் திரைப்படத்திலேயே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் சோற்றுக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது. ஏ.ஆர் முருகதாஸ் ரமணா திரைப்படத்தின் கதையை கூறியப்போதே தயாரிப்பாளருக்கு அந்த கதை பிடித்துவிட்டது.

ar-murugadoss
ar-murugadoss
Social Media Bar

இதனை தொடர்ந்து அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு படத்திற்கான கதையை டெவலப் செய்ய சொன்னார் தயாரிப்பாளர். அந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்குவதற்கும் உணவுக்கும் மட்டுமே பல ஆயிரங்களில் செலவாகி வந்தன.

முதலில் ஸ்டார் ஹோட்டலில் அறை போட்டு கொடுத்தாலும் அதனால் வருகிற செலவை பிறகு தயாரிப்பாளரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. எனவே இனி ஸ்டார் ஹோட்டலில் அவர்களுக்கு உணவு கிடையாது என கூறினார் தயாரிப்பாளர்.

இதனால் ஏ.ஆர் முருகதாஸும் உதவி இயக்குனரும் தினசரி வெளியில் சென்று உணவருந்தியுள்ளனர். வலைப்பேச்சு அந்தணன் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.