சொந்த பிள்ளைக்கிட்ட இப்படி ஒரு விஷயத்தை செஞ்சிட்டு அதை பெருமையா வேற பேசுறீங்க!.. வெங்கடேஷ் பட்டை வைத்து செய்த நெட்டிசன்கள்!.

விஜய் டிவியில் வெகு காலங்களாக சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தவர் வெங்கடேஷ் பட். இவ்வளவு காலங்கள் விஜய் டிவியில் இருந்தும் கூட அவரை அதிக பிரபலமாக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

கலகலப்பான இந்த நிகழ்ச்சியில் நடுவர் என்று டெரராக இல்லாமல் மிகவும் ஜாலியாக வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்றிருப்பார். இவர் சில சமயம் கொடுக்கும் பேட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்துவதுண்டு.

இப்படிதான் ஒருமுறை பிரியாணி உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு தயிர்சாதம் நல்ல உணவு என பேசியிருந்தார். அதற்கு எதிர்ப்புகள் ஒரு பக்கம் வந்தாலும் அவர் கூறியது சரியே எனவும் சிலர் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் தற்சமயம் அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

vengatesh-bhat
vengatesh-bhat
Social Media Bar

அதில் அவர் கூறும்போது எனக்கு குழந்தை பிறந்தால் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு சென்று வந்துதான் என் குழந்தையை பார்ப்பேன் என வேண்டியிருந்தேன். எங்கள் வழக்கப்படி குழந்தை பிறந்து 10 நாட்களுக்கு தீட்டு அதனால் நாங்கள் 10 நாட்கள் கோவிலுக்கு செல்ல கூடாது.

எனவே 10 நாட்கள் கழித்து கோவிலுக்கு சென்று வந்து 11 ஆவது நாள்தான் எனது குழந்தையை பார்த்தேன் என்கிறார் வெங்கடேஷ் பட். சொந்த குழந்தையையே தீட்டு என கூறி 10 நாட்கள் பார்க்காமல் இருந்துள்ளாரே வெங்கடேஷ் பட் என அவரை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்!.