இவனுங்க பண்றதை பார்த்தா படம் எடுக்குற மாதிரி தெரியலை!.. கமல்ஹாசனை ரோடு ரோடாக நடக்க விட்ட இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் பிரபலமான திரை நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். சாதாரணமாக நடிகர்களுக்கு ஒரு காட்சியை நடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றால் கமல்ஹாசன் அதை அரை மணி நேரத்தில் நடித்து முடித்துவிடுவார்.

அதனால்தான் நடிப்பை பொறுத்தவரை சிவாஜி கணேசனுக்கு பிறகு அதற்கு நிகரான ஒரு நபராக கமல்ஹாசன் கருதப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட கமல்ஹாசனையே படப்பிடிப்புக்கு அழைத்து சென்று எந்த வேலையும் வாங்காமல் சும்மாவே அமர வைத்த சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. அந்த படத்தில் நிறைய காட்சிகள் அமெரிக்காவில் படம் பிடிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா சென்ற கமலுக்கு முதல் சில நாட்களுக்கு வேலையே இருக்கவில்லை.

Social Media Bar

கமல் இல்லாமலே காட்சியை எடுத்து கொண்டிருந்தார் கௌதம் மேனன். இதனால் கடுப்பான கமல்ஹாசன் தயாரிப்பாளருக்கு போன் செய்து என்னங்க இந்த இயக்குனர் என்னை வைத்து படமே இயக்க மாட்டேங்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

அதே போல படப்பிடிப்பு துவங்கியவுடன் வெறுமனே கமலை நடக்க வைத்து அதை மட்டும் படம் பிடித்துள்ளார் கௌதம் மேனன். தினமும் ரோடு ரோடா நடக்க விடுறானே தவிர வேற ஒன்னும் பண்ண மாட்டேங்குறானே என கமல் கடுப்பில் இருந்துள்ளார்.

ஆனால் படமாக வந்தப்போதுதான் அந்த காட்சிகள் எதற்காக எடுக்கப்பட்டது என்பதே கமலுக்கு தெரிந்துள்ளது.