அடுத்த படத்துக்கு 10 நாள்தான் கேப்!.. ஒரு வழியா படத்தை முடித்து கிளம்பிய ரஜினி!.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் வெகு காலங்களாக நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் தா.செ ஞானவேல் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகதான் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் துவங்கியது முதலே படம் குறித்து பெரிதாக விளம்பரங்களே இல்லை. இதனால் பொதுமக்கள் பலருக்குமே வேட்டையன் என்று ஒரு திரைப்படம் தயாராகி கொண்டிருப்பதே தெரியவில்லை.

ஆனாலும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருடங்களாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடியாமல் எப்படி அடுத்த படத்திற்கு செல்ல முடியும்.

Social Media Bar

இந்த நிலையில் ஒரு வழியாக வேட்டையன் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நேற்று முடிந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்னும் 10 நாட்களில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

எப்போதும் ஒரு படத்தை முடித்தவுடன் சுற்றுலா சென்றுவிட்டுதான் அடுத்த படத்தில் நடிப்பார் ரஜினிகாந்த். அந்த வகையில் எப்படியும் விரைவில் அவர் சுற்றுலா கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.