மதுபோதையில் லிங்குசாமி செய்த தவறு!.. பழி வாங்கிய கமல்ஹாசன்!.. பெரும் பஞ்சாயத்து போல!.

கமல்ஹாசன் லிங்குசாமி இடையே உள்ள பிரச்சனை குறித்து தமிழ் சினிமாவில் பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன. இந்த பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளியே ஒரு பார்ட்டியில் லிங்குசாமி செய்த விஷயம்தான் என திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.

திரைத்துறையில் ஏதாவது திரைப்படங்கள் வெற்றி பெற்றாலே மிட் நைட் பார்ட்டி என்பது அந்த தயாரிப்பு நிறுவனத்தால் வழக்கமாக நடத்தப்படுவது உண்டு. அந்த சமயங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கான சமாச்சாரங்கள் பார்ட்டிகளில் நடப்பதும் உண்டு.

Social Media Bar

இந்த நிலையில் ஒருமுறை இப்படி நடந்த மது விருந்து ஒன்றில் கமல்ஹாசன் கலந்துக்கொண்டாராம். அந்த பார்ட்டியில் லிங்குசாமியும் கலந்துகொண்டுள்ளார். அன்று லிங்குசாமி அதிகமாக குடித்திருந்ததால் வரம்பு மீறி நடந்துக்கொண்டாராம்.

மேலும் கமல்ஹாசன் தோலில் கையை போட்டு அவரிடம் பேசினாராம். இது கமல்ஹாசனுக்கே கோபத்தை ஏற்படுத்தவே இதற்கு லிங்குசாமியை பழி வாங்க நினைத்தாராம் கமல். அதனால்தான் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்து அதை தோல்வி படமாக்கினார் என்கிறார் அந்தணன்.

தற்சமயம் அந்த படத்திற்காக கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை போய் கொண்டுள்ளது. ஒன்று கமல்ஹாசன் அதற்கு இழப்பீடு தர வேண்டும் அல்லது லிங்குசாமி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.