ரஜினியே பணிவாக போகும் அந்த தயாரிப்பாளரிடம் ஆணவம் காட்டிய லைலா.. பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்!.

Actress Laila: தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் களின் கனவுகளில் பல நடிகைகள் இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு சில படங்களில் நடிகைகள் செய்யும் எக்ஸ்பிரஷன், நடனம் அல்லது டயலாக் டெலிவரி ரசிகர்களுக்கு பிடித்த போக அது இன்றளவும் ரசிகர்கள் மறக்காமல் அவர்களை எங்கு பார்த்தாலும் கட்டாயம் அதனை செய்ய சொல்வார்கள்.

அந்த வகையில் 90ஸ் காலத்தில் கனவு கன்னியாக இருந்தவர்தான் லைலா. அவரைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பகிர்ந்து கொண்ட செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

90ஸ் கிட்ஸ் களின் கனவு கன்னி

இவர் விஜய், சூர்யா, அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் “கள்ளழகர்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு பல தமிழ் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இவர் பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமாக இருந்த போது, கடந்த 2006 ஆம் ஆண்டு ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு படங்களில் நடிக்கப் போவதில்லை என அவர் கூறியிருந்தார்.

Actress Laila
Social Media Bar

தமிழ் சினிமாவில் இவர் நடித்த பிரபலமான படங்களான தீனா, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து போன்ற படங்கள் 90ஸ் கிட்ஸ் களின் மறக்க முடியாத படங்களாக அமைந்தது.

தற்பொழுது விஜயின் கோட் படத்தில் ஒரு குணசத்திர வேடத்தில் லைலா நடித்து வருகிறார்.

லைலாவை பற்றி பிரபல தயாரிப்பாளர் கூறிய பரபரப்பு செய்தி

கலைப்புலி தாணு பிரபல தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என பல நடிகர்களின் படங்களை இவர் தயாரித்துள்ளார். முதன்முதலில் விஐபி படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் பூஜைக்கு லைலாவும், ரம்பாவும் கலந்து கொண்டனர்.

அப்போது புரொடக்ஷன் டீமிடம் சம்பள செக்கில் சைன் போட்டு கொடுத்து விட்டேன். அவர்களும் சம்பள செக்கை தயாரிப்பாளர் கொடுக்க சொன்னார் என லைலாவிடம் கொடுத்தார்கள்.

ஆனால் லைலா என்னை ஏன் தயாரிப்பாளர் வந்து பார்க்கவில்லை, என்ன ப்ரொடக்ஷன் இது? என கூறியதாக புரொடக்ஷன் மேனேஜர் செல்வம் என்னிடம் கூறினார். நான் ஆரம்பத்திலேயே இவ்வளவு பிரச்சனை பண்ணுதே எனக்கூறி படத்தில் இருந்து லைலாவை நீக்கிவிட்டேன். பிறகு அந்த ரோலில் சிம்ரன் நடித்தார் என கூறியிருக்கிறார்.