லெட்சுமி மேனனை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கு… பத்திரிக்கையாளரை தரக்குறைவாக பேசிய விஷால்!.
Vishal: சினிமாவை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும், கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நினைத்து பேசுவது. கதாநாயகிகளுடன் இயக்குனர் அல்லது தயாரிப்பாளரை இணைத்து பேசுவது போன்ற வசதிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும்.
சில சமயங்களில் படத்தில் நடிக்கும் நடிகைகள் உடன் நடிக்கும் சக நடிகர்களுடன் காதல் வயப்படுவது அல்லது இயக்குனருடன் காதல் வயப்படுவது, தயாரிப்பாளுடன் காதல் ஏற்படுவது போன்றவை நிகழும். ஆனால் இதனை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்படி நாம் அதை வதந்தியாகவும், கிசுகிசுயாகவும் தான் பார்க்கப்படும்.
இதுபோன்று குறிப்பிட்ட சில நடிகர் நடிகைகளை மட்டும் நினைத்து பேசுவது சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய ஜோடிகளாக இருந்து வருபவர் லட்சுமிமேனன் மற்றும் விஷால்.
இருவரும் படத்தில் ஒன்றாக நடித்த காலத்திலிருந்து இருவரை பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் அவ்வப்போது இணையதளங்களில் பரவி வந்தது. ஆனால் இதற்கு இரு தரப்பினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
தற்போது மீண்டும் இவர்களின் கிசுகிசுப்பு சமூக வலைத்தளங்களில் அதிகரித்து உள்ள நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர் விஷாலிடம் இதைப் பற்றி கேட்கும் பொழுது அவர் கோபப்பட்டு பேசிய நிகழ்வு தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
லட்சுமி மேனன்
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக கருதப்பட்டவர் லட்சுமிமேன். இவர் கேரளாவை பூர்விமாகக் கொண்டவர். தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்ததற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது வாங்கி இருக்கிறார். மேலும் கும்கி படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது பெற்றார்.
பத்திரிக்கையாளரை திட்டிய நடிகர் விஷால்
லட்சுமி மேனன் நடிகர் விஷாலுடன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட இரு படங்களில் நடித்திருந்தார். பாண்டியநாடு படத்தில் நடிக்கும் போதே இருவரை பற்றிய கிசுகிசு வந்து கொண்டிருந்தது. ஆனால் இதற்கு இருதரப்பினரும் ஒன்றும் கூறவில்லை.
அதன் பிறகு மீண்டும் நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். அந்த படத்தில் லட்சுமி மேனன் தைரியமாக முத்தக் காட்சிகளில் நடித்திருப்பார். இது மேலும் இருவருக்கும் உள்ள வதந்திகளை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட விஷாலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதில் கூறியிருக்கிறார். அவரிடம் லட்சுமி மேனனை நீங்கள் காதலித்து பிறகு அவரை பிரேக்கப் செய்து விட்டதாகவும், இதனால் அவர் மீண்டும் கேரள திரும்பிச் சென்று அங்கு நடனம் கற்றுக்கொண்டு உள்ளதாகவும், தற்பொழுது அவர் பார்ப்பதற்கு குண்டாக உள்ளார் என கேள்வி கேட்டு உள்ளார்.
அதற்கு விஷால், லட்சுமிமேனை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை உங்களுக்கு. யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேணாலும் பேசலாம். ஆனால் அதற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்டி யாரும் பேசக்கூடாது என கூறினார். மேலும் உங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கலாம். உங்களுக்கு பெண் மகள் இருக்கலாம். தங்கை இருக்கலாம். மனைவி இருக்கலாம். அவர்களெல்லாம் விட்டுவிட்டு மற்றவர்களை பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என அவர் கூறினார்.
இவரைப் போன்ற ஆட்கள் எல்லாம் பூமிக்கு பாரமாக உள்ளார்கள். முதலில் அவர் ஒரு பெண்மணி அதன் பிறகு தான் அவள் கதாநாயகி. எனவே ஒரு பெண்ணை பற்றி அவளுடைய தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசுவது என்பது தவறான விஷயமாகும்.
மேலும் பேசுவதற்கு இடம் இருப்பதால் யாரைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைப்பது தவறு. மேலும் நான் காதலிப்பதாக இருந்தால் நான் நேரடியாகவே சொல்லி விடுவேன். எனவே இது போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்வது எனக்கு பிடிக்காது என அவர் தெரிவித்திருக்கிறார்.