துணிவு படத்தால் நெருக்கடியில் சிக்கிய இயக்குனர் – கை மீறி போகும் வாய்ப்புகள்

இயக்குனர் ஹெச் வினோத் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் ஆவார் தமிழில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, நேர்க்கொண்ட பார்வை போன்ற படங்களை கொடுத்தவர ஹெச்.வினோத்.

தற்சமயம் இவர் நடிகர் அஜித்தை வைத்து துணிவு திரைப்படத்தை இயக்கி வருகிறார். துணிவு படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்துள்ளன. ஆனால் படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நாட்களுக்கும் இயக்குனரால் படத்தை முடிக்க முடியவில்லை. இதனால் படத்தின் பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Social Media Bar

இந்நேரம் அவர் படத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் சில தாமதங்களால் இன்னும் படப்பிடிப்பை ஹெச் வினோத் முடிக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக ஹெச் வினோத் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கலாம் என இருந்தார். விஜய் சேதுபதியும் அதற்கு ஒப்புக்கொண்டு வினோத்திற்காக கால் ஷீட் ஒதுக்கி இருந்தார்.

ஆனால் துணிவு படத்தின் தாமதத்தால் விஜய் சேதுபதியை கொண்டு இயக்கும் படமும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வினோத்திற்கு ஒதுக்கிய கால் ஷூட் வீணாகிவிடும் என யோசித்த விஜய் சேதுபதி, வெகுநாட்களாக அவரிடம் கால் ஷூட் கேட்டு வந்த இயக்குனர் ஆறுமுக குமாரிடம் அந்த கால் ஷூட்டை மாற்றி விட்டாராம் விஜய் சேதுபதி. இயக்குனர் ஆறுமுக குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் தற்போது படம் இயக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் ஹெச் வினோத் எனக் கூறப்படுகிறது.