எனக்கு சினிமாவே வராது போல – ஒரு காலத்தில் கண்ணீர் சிந்திய ரஜினி

இப்போது மாபெரும் திரை நட்சத்திரமாக இருந்தாலும் ஆரம்ப காலங்களில் நடிகர் ரஜினி அதிக பிரச்சனைகளை சந்தித்தார். சினிமாவில் இப்போது பெரும் நடிகராக இருக்கும் பலரும் ஆரம்ப காலக்கட்டத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பார்கள்.

அப்படியாக ரஜினி ஆரம்ப காலங்களில் தமிழில் நடிக்கும்போது அவருக்கு திரைத்துறையில் பெரும் பயம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருக்கு சரியான தமிழ் உச்சரிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது வரை ரஜினியின் தமிழ் உச்சரிப்பு சற்று வித்தியாசமாய் இருப்பதை காணலாம்.

ஆனால் அதையே அவரது தனி தன்மையாக மாற்றிக்கொண்டார் ரஜினி. 1977 ஆம் ஆண்டில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் புவனா ஒரு கேள்விக்குறி என்கிற திரைப்படம் தயாராகி வந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டது.

ஆனால் அப்போது ரஜினிக்கு சரியான தமிழ் உச்சரிப்பு வரவில்லை. படத்தின் வசனங்களை பஞ்சு அருணாச்சலம் எழுதி இருந்ததால், மிக நீண்ட வசனங்கள் இருந்ததால் ரஜினிக்கு அது மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ரஜினியுடன் நடிகர் சிவக்குமாரும் நடித்தார்.

ஒருமுறை ரஜினி சிவக்குமாரிடம் கூறும்போது “சினிமாத்துறை மிகவும் கடினமாக உள்ளது. எனக்கு நடிக்க வராது போல. திரும்ப ஆந்திராவிற்கே செல்ல போகிறேன்” என கவலையுடன் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் முதலில் நடிக்க கஷ்டமாகதான் இருக்கும் என ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் சிவக்குமார்.

Refresh