தயாரிப்பாளரே  கசக்கி எறிந்த பாடல்.. கவலையில் இருந்த ஜேம்ஸ் வசந்தன்.. எந்த பாட்டுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

Director James Vasanthan is one of the most popular music composers in Tamil cinema today. He has talked about his early screen career in an interview

தமிழ் சினிமாவை பொருத்தவரை நல்ல திறமை இருந்தாலும் கூட பிரபலமாக இல்லாத சிலருக்கு வாய்ப்புகள் கிடைப்பது என்பது கடினமான விஷயமாக தான் இருந்து வருகிறது.

அந்த வகையில் சினிமாவில் தனக்கு நடந்த நிகழ்வுகளை இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன் முதன்முதலாக சுப்பிரமணியபுரம் திரைப்படத்திற்கு தான் இசையமைத்தார்.

ஜேம்ஸ் வசந்தன்:

அந்தப் படத்திற்கு அவர் இசையமைக்கும் பொழுதே நிறைய பிரச்சனைகளை சந்தித்ததாக பேட்டியில் கூறியிருக்கிறார் சுப்பிரமணியபுரம் திரைப்படத்திற்காக இசையமைத்த பொழுது சசிகுமார் யாரிடமும் இந்த படத்திற்கு இசையமைப்பது ஜேம்ஸ் வசந்தம் தான் என்பதை கூறவே இல்லை.

james vasanthan
james vasanthan
Social Media Bar

சமுத்திரகனி உட்பட பலரும் கேட்டும் கூட யார் இசையமைப்பாளர் என்று சசிகுமார் கூறவில்லை. இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் கேட்ட பொழுது நான் நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று கூறினால் முதல் படத்திற்கு எதற்கு புது இசையமைப்பாளரை வைத்து ரிஸ்க் எடுக்கிறாய். இசையமைப்பாளரை மாற்றிவிடு என்று கூறுவார்கள்.

அந்த தொல்லை வேண்டாம் என்றுதான் யாரையும் கூறவில்லை என்று கூறினார் சசிக்குமார். நானும் சரி பாடல் வெளி வந்ததும் நமக்கான மரியாதை கிடைக்கும் என்று நினைத்தேன். அதேபோல எனக்கு கிடைத்தது என்று கூறியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

படத்தில் நடந்த சம்பவம்:

இந்த நிலையில் இன்னொரு திரைப்படத்திற்காக பாடல்களை இசையமைத்த பொழுது அதில் ஒரு கவர்ச்சி பாடலுக்கான இசையை  ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். ஆனால் தயாரிப்பாளருக்கு அது பிடிக்கவில்லை மேலும் அவருக்கு ஜேம்ஸ் வசந்தனையும் பிடிக்கவில்லை அதனால் அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுத்துவிட்டு அந்த பாடல்களை பெற்றுக் கொண்டு வந்து விட்டார் ஜேம்ஸ் வசந்தன்.

james vasanthan
james vasanthan

பிறகு இயக்குனர் சசி அதிலிருந்து ஒரு பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு சார் இந்த பாடலை நீங்கள் எனக்காக கொடுக்க வேண்டும் நான் இதை எனது படத்தில் பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் பிறகு பயன்படுத்தப்பட்ட அந்த பாடல் பெரிய வெற்றியை கொடுத்தது அது வேறு எந்த பாடலும் அல்ல ஈசன் திரைப்படத்தில் வரும் வந்தனமாம் வந்தனம் என்கிற அந்த பாடல் தான். அப்போதைய சமயத்தில் அதிக வரவேற்பு பெற்ற பாடலாக அது இருந்தது.