எப்போதுமே நம் சினிமாவை பொறுத்த வரை அதில் ரசிகர்கள் என்பவர்கள் தொடர்ந்து கெட்ட பெயரைதான் வாங்கி வருகின்றனர். ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பது என்பது எப்பொழுதுமே ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது கிடையாது.
அதனால்தான் நடிகர் அஜித் கூட தனக்கென்று ஒரு ரசிகர் மன்றத்தை இதுவரை வைத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் ரசிகர்கள் என்கிற பெயரில் நல்லது செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தீமைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படியாகதான் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாளிலும் நடந்தது. புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவில் ஒரு திரையரங்கில் மட்டும் நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களை பார்ப்பதற்காக வந்திருந்தார்.. அப்பொழுது அந்த முதல் ஷோவிற்க்கு வந்திருந்த ஒரு பெண்ணும் அவருடைய இரண்டு குழந்தைகளும் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொண்டனர்.
அல்லு அர்ஜுனால் நடந்த விபரீதம்:

அதனால் அந்த பெண் இறந்து விட்டார். தற்சமயம் அதில் ஒரு குழந்தையும் மிக மோசமான கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது ஆக இருந்த பெண் குழந்தை மட்டும் தப்பித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சில விஷயத்தை கூறினார். அதில் அவர் கூறும்போது இரண்டு பக்கமுமே தவறு இருக்கிறது முதல் நாள் முதல் ஷோ என்னும் பொழுது ரசிகர்கள் இப்படி கூட்டமாக வந்து நிற்பார்கள் என்பது அந்தப் பெண்ணுக்கு தெரிந்து இருக்கும்.
அப்படி இருக்கும் பொழுது அவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முதல் ஷோவிற்கு சென்றிருக்கக் கூடாது. மற்றொரு பக்கம் அல்லு அர்ஜுன் நினைத்திருந்தால் இந்த பிரச்சனையை உருவாக்காமல் தவிர்க்கலாம். அவர் எதற்கு நேரில் வரவேண்டும் கண்டிப்பாக அவர் நேரில் வந்தால் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள் என்பது அவருக்கு தெரியும்.
இருந்தாலும் அவர் ரசிகர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் நேரில் வந்தது தவறு என்று இந்த பாவத்தை எங்கு சென்று கழுவ போகிறார் அல்லு அர்ஜுன் என்று கேள்வி கேட்டிருக்கிறார் அந்தணன்.