அவரை பார்த்தாலே எனக்கு அந்த மூடு வந்திடும்.. வெளிப்படையாக கூறிய நடிகை அதிதி ராவ்.!
ஹிந்தி சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் மிக பிரபலமானவராக இருந்தவர் நடிகை அதிதி ராவ். வெகு காலங்களாக ஹிந்தி சினிமாவில் இருந்தும் கூட இவருக்கு கதாநாயகியாக நடிக்க மட்டும் பெரிதாக வாய்ப்புகள் என்பதே கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் தென்னிந்திய சினிமாவில் முயற்சி செய்யலாம் என முடிவு செய்தார் நடிகை அதிதி சங்கர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில்தான் பெரும்பாலும் வடக்கில் இருந்து வரும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தமிழில் முயற்சி செய்ய துவக்கினார். தமிழில் அதிதி ராவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகளும் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து அவருக்கென்று தமிழில் ரசிகர்களும் கிடைக்க துவங்கினர்.
மேலும் மலையாளம், ஹிந்தியிலும் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து.2003 ஆம் ஆண்டு இவர் சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்திருந்தார். 11 வருடம் சேர்ந்து வாழ்ந்த பிறகு 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து அடுத்து நடிகர் சித்தார்த்தை 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் அதிதி ராவ்.
இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகை மனிஷா கொய்ராலா குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது நடிகை மனிஷா கொய்ராலாவை எனக்கு மிகவும் பிடிக்கும். திரையில் அவரை பார்க்கும்போது திரைக்குள் தாவி உள்ளே சென்றுவிடலாமா என தோன்றும்.
ஆனால் பார்த்தப்பிறகுதான் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. இப்போது மனிஷா கொய்ராலாவை பார்த்தாலும் கூட நான் சிறுவயது மூடுக்கு சென்றுவிடுவேன் என கூறியுள்ளார் அதிதி ராவ்.