Tamil Cinema News
2500 கோடி சொத்துக்கு அதிபதி… ஆனால் ஒரு நடிகையால் இப்ப எல்லாம் போச்சு… சிறைக்கு சென்ற தொழிலதிபர்..!
என்னதான் பல கோடிகளுக்கு அதிபராக இருந்தாலும் கூட தொழிலதிபர்கள் பலருக்கும் பெண்கள் மீது இருக்கும் ஆசை மட்டும் குறைவதே இல்லை. ஆனால் அந்த மாதிரியான விஷயங்களால் தொடர்ந்து அந்த தொழிலதிபர்கள் பெயர் கெடுவதும் உண்டு.
இப்படிதான் தமிழ்நாட்டில் ஒரு தொழிலதிபர் தொடர்ந்து ஒரு நடிகையின் மீது ஆசையில் இருந்தார். தனது பணபலத்தை கொண்டு நடிகையை கைக்குள் கொண்டு வந்து பல காலம் வாழ்ந்து வந்தார்.
ஆனால் அந்த நடிகை இறுதியில் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதே மாதிரி தெலுங்கு நடிகை ஹனிரோஸ் விவகாரம்தான் இப்போது சினிமாவில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலமான கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஹனி ரோஸ். ஹனி ரோஸ்க்கு தொழிலதிபர் பாபி செம்மனூர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டப்போது அங்கு பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள இவர் இடம் கொடுத்திருந்தார். ஆனால் அதே சமயம் இவரை குறித்து சர்ச்சைகளும் இருந்து வருகின்றன. அதில் ஒன்றுதான் ஹனி ரோஸ் சர்ச்சை.
சமீப காலங்களாக ஹனிரோஸ் கலந்துக்கொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இவரும் கலந்துக்கொண்டுள்ளார். மேலும் அங்கு சென்று இரட்டை அர்த்தத்தில் ஏதாவது ஒன்றை பேசுவது என இருந்துள்ளார் பாபி செம்மனூர்.
இதனால் கோபமடைந்த ஹனி ரோஸ் தற்சமயம் இதுக்குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார்.