Tamil Cinema News
அமரன் படத்தால் வந்த பிரச்சனை.. சினிமாவை விட்டு விலக இருந்தேன்.. திடீர் தகவல் கொடுத்த எஸ்.கே
தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டும்தான் சினிமாவிற்கு வெளியில் இருந்து வந்து சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் திருச்சியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இளைஞனாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதனால் சிவகார்த்திகேயனின் வெற்றி என்பது வெகுஜன மக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மற்ற மொழி சினிமாக்களை போலவே நமது சினிமாவிலும் கூட வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் பெரும்பாலும் வெளியில் இருந்து வருகிற நடிகர்களை வெறுக்கின்றனர். அந்த வகையில் பலரும் சிவகார்த்திகேயனை வெறுக்கின்றனர்.
இதுக்குறித்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது என்னிடம் நேரடியாகவே நிறைய பேர் உனக்கு இங்க என்ன வேலை என கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பை விட்டு விட்டு சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால் என் மனைவி எனக்கு ஆறுதலாக இருந்தார். சினிமாவில் அஜித், விக்ரம் மாதிரியான நடிகர்களுக்கு பிறகு வெகு வருடங்கள் கழித்து சினிமாவிற்கு தொடர்பில்லாத இடத்தில் இருந்து நீங்கள்தான் சினிமாவிற்கு வந்துள்ளீர்கள். உங்களால் வரும் நன்மைகளை அனுபவிக்கும் நாங்கள் இந்த மாதிரி விமர்சனங்களையும் அனுபவித்துதானே ஆக வேண்டும் என என் மனைவி கூறினார்.
இப்போது அமரன் திரைப்படம் 300 கோடியை தாண்டி வெற்றி கொடுத்துள்ளது. இது என்ன மாதிரியான பிரச்சனையை கொண்டு வர போகிறது என தெரியவில்லை என கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.