இனிமே அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. சமந்தா முடிவால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்.!

தமிழில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகுதான் சமந்தாவிற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. அதனை தொடர்ந்து நடிகை சமந்தா சூர்யா, விஜய், அஜித் மாதிரியான நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

இப்படி பிரபலமாகி வரும் சூழலில்தான் அவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில வருட காதலுக்கு பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இந்த உறவு வெகு காலங்கள் நீடிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்கள் இருவருமே பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் சமந்தாவிற்கு மயோசிடிஸ் என்கிற அரிதான நோய் ஒன்று ஏற்பட்டது. இதனால் கடுமையான உடல் நல பிரச்சனைக்கு உள்ளானார் நடிகை சமந்தா. இதனால் தொடர்ந்து அவரால் சினிமாவில் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

Social Media Bar

தற்சமயம் இதையெல்லாம் தாண்டி மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் சமந்தா. இனி சாதாரணமாக வந்து போகும் கதாநாயகி மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை. நடித்தால் முக்கிய கதாபாத்திரமாக மட்டும்தான் நடிக்கபோகிறேன் என கூறியுள்ளார் சமந்தா.

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பிறகு சமந்தாவை நிறைய படங்களில் ஐட்டம் பாடல்களில் நடனமாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். இந்த நிலையில்தான் சமந்தா இப்படியொரு முடிவை எடுத்துள்ளார். இது தற்சமயம் தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.