ஒன்றரை வருஷமா எனக்கு எல்லாவுமா இருந்த நடிகர்.. சமந்தா வெளியிட்ட ரகசியம்.!
கோலிவுட் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி போன்ற படங்களின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதற்கு பிறகு நடிகை சமந்தாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஆனாலுமே கூட அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் நான் ஈ.
அதற்கு பிறகுதான் சமந்தாவுக்கு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் அதிக வாய்ப்புகள் வர துவங்கின. இந்த நிலையில் தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்தார் சமந்தா. ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் மயோசிடிஸ் என்கிற கடுமையான உடல் பிரச்சனைக்கு உள்ளானார் நடிகை சமந்தா. அப்போதைய சமயத்தில் அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இந்த நிலையில் சில வருடங்கள் அவர் சினிமாவில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் அப்போதைய சமயத்தில் தன்னை யார் பார்த்துக்கொண்டது என்பது குறித்து கூறியிருக்கிறார் சமந்தா. அதில் அவர் கூறும்போது ராகுல்தான் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருந்தார்.
அப்போது 8 மாதங்கள் தினமும் காலையில் என்னை பார்க்க வந்துவிடுவார் ராகுல். அவர் எனக்கு ஒரு நண்பர் என்பதையும் தாண்டி எனக்கு சகோதரனாக குடும்ப உறுப்பினராக இருந்தவர் ராகுல்.