ரஜினிக்கு பிடித்த முக்கியமான 3 படங்கள் – மூணும் மூன்று விதம்

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் ரஜினிகாந்த். அவரை மாதிரி இத்தனை வருடங்கள் தமிழில் டாப் நடிகர் இடத்தை பிடித்த வேறு நடிகர் கிடையாது என்று தான் கூற வேண்டும்.

அப்படியாக 70 வயதை கடந்த பிறகும் கூட இப்பொழுதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக முதல் இடத்தை பிடித்தவர் ரஜினிகாந்த். அப்படி இருக்கும் பொழுது ரஜினிகாந்துக்கு பிடித்த படங்கள் என்று அவர் கூறிய திரைப்படங்கள் பலவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் படங்களாக இருக்கின்றன.

அதில் முதலாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் காட்பாதர். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம் இருக்கிறது இந்த திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

Social Media Bar

தமிழில் வெளிவந்த நாயகன் தொடங்கி காலா திரைப்படம் வரையில் எல்லாமே காட்பாதர் திரைப்படத்தின் சாயலாக எடுக்கப்பட்ட படங்கள்தான். அடுத்து இரண்டாவது திரைப்படம் திருவிளையாடல் புராணம். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி அப்பொழுதே மிகப்பெரும் முக்கிய படமாக இருந்த திரைப்படம் திருவிளையாடல் புராணம்.

அந்த திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மூன்றாவதாக கூறிய திரைப்படம் ஹே ராம். ஹே ராம் திரைப்படம் கமல் இயக்கத்தில் கமலே நடித்து கமலே தயாரித்து உருவான திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் ஒரு ஹாலிவுட் தரத்தில் உருவான தமிழ் திரைப்படம் என்று கூறலாம். இது குறித்து ரஜினிகாந்த் கூறும் பொழுது ஹே ராம் திரைப்படத்தை 30 முறைக்கும் அதிகமாக பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் அந்த திரைப்படத்தில் புதிதாக ஒன்றை நான் கற்றுக் கொண்டே இருப்பேன் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.