இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் பாடல்களுக்கும் கூட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறும்போது தக் லைஃப் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு நான் ஒரு இசையை அமைத்திருந்தேன். பிறகு எனக்கு வெளியூருக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் நான் திரும்பி வந்தப்போது மணிரத்தினம் அந்த இசையை மாற்றி இருந்தார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.
அது படத்துக்கு நன்றாகவே செட் ஆகி இருந்தது. அதுதான் மணிரத்தினம் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பதற்கு காரணம் என கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.







