நிவேதா தாமஸின் ஓணம் புடவை லுக்.. இளசுகள் மத்தியில் ட்ரெண்ட் ஆன பிக்ஸ்.!

சிறு வயது முதலே மலையாளம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸை பொறுத்தவரை தமிழ் சினிமாவிலேயே கமல் மற்றும் ரஜினி இருவருக்குமே மகளாக நடித்த ஒரு நடிகை என்றால் அது நிவேதா தாமஸ்தான்.

Social Media Bar

பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கும் தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கும் இவர் மகளாக நடித்திருப்பார் அதற்குப் பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழை விடவுமே தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் நிவேதா தாமஸின் உடல் எடை அதிகரித்தது. இது அவரது வாய்ப்புகளில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறையவும் துவங்கியது. இந்த நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்து வருகிறார் நிவேதா தாமஸ் இந்த நிலையில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ஓணம் புடவை கட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.