விஷாலை வைத்து அடுத்த ப்ரோஜக்டை துவங்கிய சுந்தர் சி.. மூக்குத்தி அம்மன் 2 நிலவரம் என்ன?

தமிழில் காமெடி திரைப்படங்களுக்கும் பேய் திரைப்படங்களுக்கும் பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி. இந்த நிலையில் இப்பொழுது சாமி படங்களை இயக்கவும் இறங்கி இருக்கிறார் சுந்தர் சி.

ஏனெனில் அரண்மனை படங்களை எடுத்துக் கொண்டாலே அதில் கிளைமாக்ஸில் சாமி காட்சிகளை வைத்துதான் திரைப்படத்தை முடிப்பார் சுந்தர் சி. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்து இருக்கிறார்.

இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பெரிதாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சுந்தர் சி தான் இயக்குகிறார். இந்த படத்தை முடித்த கையோடு அடுத்து விஷாலை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இயக்குகிறார் சுந்தர் சி என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

mookuthi amman
mookuthi amman
Social Media Bar

இந்த படத்தில் விஷாலுக்கு இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் முதல் கதாநாயகியாக நடிகை கயாடு லோகர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது கதாநாயகிக்கான தேடல்கள் தற்சமயம் சென்று கொண்டு இருக்கின்றன.

பெரும்பாலும் இரண்டாவது கதாநாயகி தெலுங்கு நடிகையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆம்பள மதகஜராஜா போன்ற திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சியும் விஷாலும் இணையும் படங்களாக இது இருக்கும்..