தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!
தமிழில் சொன்ன தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து அதிக வெற்றியை கொடுத்த படமாக காந்தாரா திரைப்படம் இருந்தது. இந்த படம் நேரடி தமிழ் படம் இல்லை என்றாலும் கூட இப்பொழுது அந்த திரைப்படத்திற்கும் அந்த படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டிக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்று கூற வேண்டும்.
காந்தாரா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே அந்த படத்தில் எடுக்கப்படும் சாமி ஆடும் காட்சிகள் தான். கதாநாயகனுக்கு சாமி வந்த பிறகு அவன் செய்யும் விஷயங்கள் எல்லாமே நிஜமாக சாமி வந்தவர்கள் செய்வது போலவே இருக்கும்.
அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இது குறித்து ரிஷப் ஷெட்டி வினோதமான தகவலை சமீபத்தில் கூறியிருக்கிறார்.

படப்பிடிப்பில் நடந்த பிரச்சனை:
அதில் அவர் கூறும் பொழுது காந்தாரா திரைப்படத்தில் சாமி வரும் காட்சிகளை நான் படமாக்கும் பொழுது அதை என்னுடைய பட குழுவிற்கு நான் சொல்லவே இல்லை. என்ன மாதிரி கேமராவை வைக்க வேண்டும் என்று மட்டும் கூறிவிட்டு அந்த காட்சியை நான் நடிக்க துவங்கினேன்.
ஆனால் அந்த காட்சியை எடுத்த போதெல்லாம் நான் மிகவும் சோர்வடைந்தேன். என்னால் தொடர்ந்து அந்த காட்சிகளை நடிக்க முடியவில்லை.
இந்த சமயத்தில்தான் உண்மையாகவே சாமியாடக்கூடிய ஒரு நபரை அழைத்து வந்து படப்பிடிப்பில் வைத்துக் கொண்டேன். அப்பொழுது எனக்கு சில நேர்மறையான சக்திகள் கிடைத்ததாக உணர்ந்தேன். அதற்கு பிறகுதான் என்னால் அந்த காட்சிகளில் நல்லபடியாக நடிக்க முடிந்தது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.