தற்சமயம் விக்ரமின் மகனான நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்று வரும் திரைப்படம் பைசன். இந்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். தென் தமிழகத்தில் நடக்கும் ஏற்ற தாழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
கபடி வீரராக இருக்கும் துருவ் விக்ரம் இந்த ஏற்றத்தாழ்வுகளை விட்டு வெளியே வந்து எப்படி தனக்கான இடத்தை பிடிக்கிறார் என்பதுதான் கதையாக இருக்கும் என தெரிகிறது. இந்த படம் நடிகர் துருவ் விக்ரமிற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ரசிகர் சொன்ன விஷயம்:
முக்கியமாக இந்த படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. வழக்கமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு 10 பேரை சுட்டு தள்ளும் திரைப்படமாக இல்லாமல் மாறுப்பட்ட திரைப்படமாக பைசன் இருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் துருவ் விக்ரமிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையி ஒரு ரசிகர் அளித்த கமெண்ட் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அவர் கூறும்போது இயக்குனர் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித், வெற்றிமாறன் மூன்று இயக்குனர்கள் இயக்கத்திலும் 6 திரைப்படங்களில் நடித்தால் பெரிய ஹீரோ ஆகிவிடுவீர்கள் என கூறியுள்ளார்.
ரஜினி, கார்த்தி மாதிரியான பெரிய ஹீரோக்களுக்கு வெற்றி படங்களை பா.ரஞ்சித் கொடுத்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால் அவரது இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









