தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அதிக பிரபலமானவராக இருப்பவர் நடிகர் பார்த்திபன். பார்த்திபனை பொறுத்தவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதே மாதிரியான திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். ஆனாலும் கூட பெரிய பெரிய இயக்குனர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு அங்கீகாரம் என்பது பெரிதாக நடிகர் பார்த்திபனுக்கு கிடைக்கவில்லை.
ஆனால் ஒரு நடிகராக அவர் நிறைய படங்கள் மூலமாக பிரபலம் அடைந்து இருக்கிறார். இப்போதும் வடிவேலுவும் பார்த்திபனும் சேர்ந்து நடித்த நிறைய நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கின்றன. அந்த அளவிற்கு கவுண்டமணி செந்தில் மாதிரியே ஒரு காம்போவாக வலம் வந்தவர்கள் இவர்கள் இருவரும்.
பார்த்திபன் சொன்ன விஷயம்:
பார்த்திபன் ஒரு பேட்டியில் இதுக்குறித்து கூறும் பொழுது ஆரம்பத்தில் வடிவேலு குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே நான் இந்த குண்டக்க மண்டக்க என்கிற பாணியை துவங்கி விட்டேன்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு எடக்குமடக்காக பதில் சொல்வதை ஒரு பானியாக உருவாக்கினேன். ஆனால் ஆரம்பத்திலேயே அது வடிவேலுக்கு பிடிக்கவில்லை அவர் விருப்பம் இல்லாமல் தான் அந்த காமெடிகளில் நடித்தார் ஆனால் அதற்குப் பிறகு அந்த காமெடிகள் அதிக பிரபலம் அடைய தொடங்கின என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.










