நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா இவர்கள் இருவருக்கும் இடையே பல வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிரச்சனை இருந்து வருகிறது என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உண்டு.
ரஜினியும் கூட ஒரு முறை இளையராஜாவை சந்தித்து மேடையில் பேசும்பொழுது கமல்ஹாசனுக்கு போட்ட அளவிற்கு நல்ல இசையை தனக்கு போடவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
காரணம் என்னவென்றால் வீரா திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தபோதுஅந்த படத்தில் இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுக்கள் நடந்தன. அப்பொழுது வீரா படத்திற்கு இளையராஜா அதிக சம்பளம் கேட்டார் என்று தயாரிப்பாளர் ரஜினியிடம் வந்து கூறினார்.
எனவே ரஜினி இளையராஜாவிடம் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும்படி பேசினார். அப்பொழுது பதில் அளித்த இளையராஜா நான் எப்பொழுதாவது உங்களுடைய சம்பள விஷயம் பற்றி உங்களிடம் பேசியிருக்கிறேனா? என்னிடம் மட்டும் எதற்கு சம்பளம் குறித்து பேசுகிறீர்கள் என்று நேரடியாக கேட்டு விட்டார்.
இருவருக்கும் வந்த பிரச்சனை:

இதனால் வருத்தம் அடைந்த ரஜினிகாந்த் அதற்குப் பிறகு இளையராஜாவிடம் எந்த வாய்ப்புகள் குறித்தும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் வீரா திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு தேவா மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகிய இருவர் தான் அதிகமாக இசையமைத்து வந்தனர்.
இப்படி இருந்து வந்த நிலையில் சில காலங்களுக்குப் பிறகு இவர்களுக்கு இடையே இருந்த நட்பு மீண்டும் தொடர துவங்கியது. ஆனாலும் கூட ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இளையராஜாவிற்கு அமையவில்லை.
ஏனெனில் இப்பொழுது அனிருத் மாதிரியான இசையமைப்பாளர்களுக்கு தான் தொடர்ந்து ரஜினி வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் கமல் மற்றும் ரஜினிகாந்த் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் அடுத்து தயாராக இருக்கிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப் போவதாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறாராம் கமல். எனவே இதுக்குறித்து அவர் இளையராஜாவிடம் நேரில் சென்று பேசியதாக சில பேச்சுக்கள் இருக்கின்றன.
 
			 
			






