படக்குழுவிற்கு வார்னிங் கொடுத்த அஜித்? – சிக்கலில் மாட்டிய இயக்குனர்!

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. வருகிற பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்துவரும் துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன. 

Social Media Bar

அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இன்று படத்தை ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார் உதயநிதி.

இந்த நிலையில் படம் பொங்கலுக்குள் தயாராவது கடினம் என கூறி வருகிறது படக்குழு. எனவே படக்குழுவை சந்தித்த அஜித் ஏன் படம் வெளியாகாது? என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டப்பிங் வேலைகள் மற்றும் வி.எஃப்.எக்ஸ் வேலைகள் முழுதாக முடியவில்லை. இன்னும் ஒரு மாத காலத்தில் அதை முடிக்க முடியுமா? என தெரியவில்லை என படக்குழுவில் கூறியுள்ளனர்.

அதற்கு அஜித் இரவு பகலாக பேச வேண்டும் என்றாலும் நான் டப்பிங் பேசுகிறேன். வி.எஃப்.எக்ஸ் வேலையை நான்கு ஐந்து நிறுவனங்களுக்கு பிரித்து கொடுங்கள். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது எனக்கு பொங்கலுக்குள் படம் வெளியாக வேண்டும் என கடுமையாக எச்சரித்துள்ளார் அஜித் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

இதற்கிடையே தயாரிப்பாளர் ஏற்கனவே படத்தின் தயாரிப்பிற்கு அதிக செலவாகியுள்ளது. எனவே குறைந்த செலவில் பாக்கி பட வேலைகளை முடிக்கவும் என இயக்குனர் ஹெச். வினோத்திடம் கூறியுள்ளாராம். இந்த நிலையில் பல நிறுவனங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் வேலைகளை பகிர்ந்து கொடுக்க வேண்டும்  எனில் அதிக செல்வாகுமே என இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டுள்ளாராம் இயக்குனர் ஹெச். வினோத்.