சென்னை மக்களுக்காக கோவில் கட்டிய அர்ஜுன்!.. இவரை போய் இப்படி பேசலாமா.. கோபமான பத்திரிக்கையாளர்!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அர்ஜுனின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து ஹீரோ ஆன்ட்டி ஹீரோ வில்லன் என பல கதாபாத்திரங்களில் அர்ஜுன் நடித்துள்ளார்.

 நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு அர்ஜுனுக்கு ஒரு கம் பேக்காக அமைந்த திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா. மங்காத்தா திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானது.  இதனை தொடர்ந்து மீண்டும் அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்க துவங்கியது பிறகு ஹீரோ மாதிரியான சில படங்களில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

 தற்சமயம் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அர்ஜுன். இந்த நிலையில் அர்ஜுனை பற்றி சமூக வலைதளங்களில் சிலர் பேசும் பொழுது அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை வேற்று மாநிலத்தை சேர்ந்தவர் என பேசியிருக்கின்றனர்.

இது குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் பேசும் பொழுது அர்ஜுன் சென்னையில்தான் அதிக இடங்களை வாங்கி வைத்துள்ளார். அவரது அதிக சொத்துக்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. சென்னை மக்களுக்காக ஒரு ஆஞ்சநேயர் கோயிலை சென்னையில் அவர் கட்டியுள்ளார் அப்படிப்பட்ட அர்ஜுனை வேற்று மாநிலத்தவர் எனக் கூறுவது சரி கிடையாது என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.