தமிழில் குறைந்த படங்களே எடுத்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சில திரைப்படங்கள் இயக்கிய பிறகு இயக்குனர்களுக்கு ஒரு தெளிவு வரும். எப்படியெல்லாம் கேமிராவில் ட்ரிக் செய்து ஒரு படத்தை இயக்கலாம் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் அப்படியான வேலையை தனது முதல் திரைப்படத்திலேயே செய்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் ஜிகர்தண்டா, இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்தார். இந்த திரைப்படம் பெறும் வெற்றி அடைந்ததை அடுத்து இதை தெலுங்கிலும் படமாக்கினார்கள்.
இதில் பாபி சிம்ஹா ஒரு பழைய காலத்து காரை வைத்திருப்பார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு அந்த இண்டர்வெல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி இருந்தது. அந்த காட்சிக்கு கார் வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அந்த கார் அவர்களிடம் இல்லை.
இந்த நிலையில் என்ன செய்யலாம் என யோசித்த இயக்குனர் அந்த காட்சியில் காரின் லைட்டுதான் தெரியும். எனவே அதை வைத்து சமாளிப்போம் என காரின் ஹெட்லைட்டை வாங்கி அதை ஒரு ஸ்டாண்டில் கட்டி படப்பிடிப்பை நடத்தினர்.
ஆனால் அந்த காட்சியில் பார்க்கும்போது நிஜமாகவே கார் அங்கு இருப்பது போன்றே தோன்றும். அவ்வளவு நேர்த்தியாக அந்த காட்சியை எடுத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.






