எம்.ஜி.ஆருக்கு விசில் அடித்து எம்.எல்.ஏ ஆன ரசிகர்!.. இது புது கதையா இருக்கே!..

MG Ramachandran: சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே எம்ஜிஆர் தனது ரசிகர்கள் மீது மாறாத அன்பு கொண்டிருந்தார். காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது கூட யாராவது ஒரு ரசிகர் நிற்பதை பார்த்தால் உடனே இறங்கி அந்த ரசிகர்களிடம் பேசி விட்டு செல்பவர் எம்.ஜி.ஆர்.

இதற்காகவே எம்.ஜி.ஆர் போகும் வழி எல்லாம் எப்போதும் அவரை பார்க்க ரசிகர்கள் நிற்பது உண்டு. இந்த நிலையில் ஜெகத் ரட்சகன் என்னும் நபர் எம்.ஜி.ஆர் மீது மாறாத பற்று கொண்டவராக இருந்தார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் வெளியாகும் பொழுது அவற்றை தொடர்ந்து பார்த்து வந்தவராக இருந்தார்.

அவர் எப்படியாவது எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த நிலையில் ஒருநாள் கஷ்டப்பட்டு எம்.ஜி.ஆரை நேரிலும் சந்தித்து விட்டார். ஆனாலும் அவருக்கு ஆசை அடங்கவில்லை தினமும் எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

எம்.ஜி.ஆர் போகும் வழி எல்லாம் இவர் நின்று கொண்டு எம்.ஜி.ஆருக்கு வணக்கம் வைத்துக் கொண்டே இருந்தார். இதனை பார்த்த எம்.ஜி.ஆர் யார் இந்த ரசிகர் என் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறார். என்று அழைத்து அவரிடம் பேசும் பொழுது எப்போதும் உங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் தலைவா அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் ஜெகத்ரட்சகன்.

அதனை கேட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எதற்கு ரோட்டில் நிற்கிறாய் என்று கூறி அவருக்கு எம்.ஜி.ஆரின் அலுவலகத்திலேயே ஒரு வேலையை போட்டுக் கொடுத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் இடம் மாறாத அன்பு பெற்ற ஜெகத்ரட்சகன் எம் எல் ஏ வரை பெரும் உயரத்தை தொட்டார்.