Cinema History
கண்ணதாசனை அடிக்க சென்ற சிவாஜி! – ரெண்டு பேருக்கும் நடுவே நடந்த சம்பவம்!
1950 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. அவை எல்லாம் புத்தக வடிவிலோ விடியோ வடிவிலோ சிதறி கிடக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கையிலும் கூட சுவாரஸ்யமான சில நிகழ்வுகள் நடந்துள்ளன.

1955 இல் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து நடித்து தயாராகி வந்த படம் தெனாலி ராமன். இந்த சமயத்தில் சிவாஜி, கண்ணதாசன், எம்.ஜி.ஆர் மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். மூவருமே அப்போது திமுக கட்சியில் இருந்தனர்.
இப்போது போலவே அப்போதும் திமுகவில் உள்ள நபர்கள் கோவில் பக்கம் சென்றுவிட்டால் அது பெரும் பிரச்சனையாகிவிடும். அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் சம்பூர்வ ராமாயணம் என்கிற புராண படத்தில் நடிக்க ஒப்புதல் கொடுத்திருந்தார். மேலும் அப்போதுதான் மனைவியோடு திருப்பதி கோவிலுக்கு சென்று வந்திருந்தார்.
இதனால் திமுக கட்சியில் சிவாஜியின் மீது குற்றம் சுமத்த கோபமான சிவாஜி கட்சியை விட்டு விலகினார். இந்த நிலையில்தான் தெனாலிராமன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் சிவாஜியை மண்ணில் புதைத்து அவரை யானையை வைத்து மிதிக்க வைக்கும் தண்டனை காட்சி வரும்.
அந்த காட்சியை எடுத்துக்கொண்ட கண்ணதாசன், பத்திரிக்கையில் இதுதான் சிவாஜி கணேசனின் எதிர்காலமா? என எழுதிவிட்டார். இதை கண்டு கோபமடைந்த சிவாஜி கணேசன் கண்ணதாசனை தேடி போய் “டேய் கண்ணதாசா” என கத்தவும், பயந்துபோன கண்ணதாசன் என்.எஸ்.கே படப்பிடிப்பு நடந்த ஷெட்டிற்குள் ஓடியுள்ளார்.
அங்கும் துரத்தி வந்துள்ளார் சிவாஜி. பிறகு அவர்களை தடுத்து நிறுத்தினார் என்.எஸ்.கே. அந்த சமயத்தில் என்.எஸ்.கே மீது திரைத்துறையில் அனைவருக்கும் மரியாதை உண்டு. எனவே அவர் பேச்சை அனைவரும் கேட்பார்கள். சிவாஜியையும், கண்ணதாசனையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார் என்.எஸ்.கே.
இந்த நிகழ்விற்கு பிறகும் கூட சிவாஜி கணேசனும், கண்ணதாசனும் நல்ல நட்பிலேயே இருந்தார்கள். பல படங்களில் இணைந்து பணிப்புரிந்துள்ளனர்.
