Connect with us

தப்பான பேசுனது அவன்!.. நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்!.. ஏ.வி.எம் நிறுவனத்தையே ஆட விட்ட பிரபலம்!.. இப்படியும் நடந்துச்சா!..

avm studio

Cinema History

தப்பான பேசுனது அவன்!.. நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்!.. ஏ.வி.எம் நிறுவனத்தையே ஆட விட்ட பிரபலம்!.. இப்படியும் நடந்துச்சா!..

Social Media Bar

சினிமாவில் முதுகெலும்பாக இருக்கும் சில துறைகளில் டப்பிங் ஆர்டிஸ்ட்கள் துறையும் முக்கியமானது ஆகும். நாம் பல காலங்களாக பார்த்து வரும் திரைப்படங்களில் பலரது குரல்களை டப்பிங் செய்வது வேறு ஒரு நபராகத்தான் இருக்கும்.

நல்ல குரல் வளம் கொண்ட பெண்கள்தான் அதிகபட்சம் நடிகைகளுக்காக டப்பிங் செய்வார்கள் நிஜக்குரலில் டப்பிங் பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே. அப்படி இருக்கும் பொழுது ரஜினி கமல் போன்ற நடிகர்கள் பெரும் வளர்ச்சியில் இருந்த காலகட்டத்தில் டப்பிங் துறையில் வெகுவாக பிரபலமாக இருந்தவர் அனுராதா.

அனுராதா அப்பொழுது பிரபலமாக இருந்த ராதா அம்பிகா நக்மா என்று பல நடிகைகளுக்கும் பின்னணி குரலில் பேசி வந்து கொண்டிருந்தார்.  சமீபத்தில் பேட்டியில் அவர் கூறும் போது தமிழ் சினிமாவை விட்டு அவர் போவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ஒரே சமயத்தில் ஏகப்பட்ட படங்களில் டப்பிங்கிற்கு அழைத்ததால் நிறைய பிரச்சினைகளை அப்போது சந்தித்தேன் ஒருமுறை ஒரு இயக்குனருக்காக நான் டப்பிங் பேச சென்ற பொழுது அன்று சகலகலா வல்லவன் திரைப்படத்திற்கும் டப்பிங் பேச வேண்டி இருந்தது. இதற்காக ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து எனக்கு போன் வந்து கொண்டே இருந்தது.

ஏ.வி.எம்மை விட்டு நீங்கிய அனுராதா:

அதற்கு பிறகு அந்த இயக்குனரிடம் கூறி ஏ.வி.எம்மிற்கு டப்பிங் பேச சென்ற பொழுது அங்கே இருந்த உதவி இயக்குனர் என்னை மரியாதை இல்லாமல் பேசிவிட்டார். இதனால் கோபமாகி நானும் அவரை மரியாதை இல்லாமல் திட்டி விட்டேன். இதனை தொடர்ந்து எனக்கு ஆறு மாதங்கள் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து டப்பிங் பேசுவதற்கான வாய்ப்புகளே வரவில்லை.

பிறகு என்னை அழைத்த ஏ.வி.எம் நிறுவனம் அந்த உதவி இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டால் திரும்ப டப்பிங் துறையில் நீங்கள் தொடலாம் என்று கூறி இருக்கின்றனர். அதற்கு அவர் நான் கொஞ்சம் படிச்சிருக்கேன் சார் டப்பிங் இல்லாமல் என்னால் வேறு வேலைகளும் பார்க்க முடியும் நான் செய்தது எந்த வகையிலும் எனக்கு தவறு என்று தெரியவில்லை.

எனவே நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் துடிக்கும் கரங்கள் திரைப்படம் ரஜினி நடிப்பில் உருவானது. அந்த திரைப்படத்திற்கு நடிகைக்கான டப்பிங் அனுராதா தான் பேச வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆனால் ஏ.விஎ.ம் நிறுவனத்தில் அவருக்கு சண்டை இருப்பதை அறிந்தவர் டப்பிங் ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்க வேண்டாம் வேற ஏதாவது வைப்போம் என்று பேசியிருக்கிறார் இந்த விஷயத்தை அந்த ஏவிஎம் நிறுவனம் வரும் வாய்ப்பை தவற விட வேண்டாம் என்று திரும்ப அனுராதாவிற்கு ஃபோன் செய்து அவரை டப்பிங்கிற்கு அழைத்திருக்கிறது அதன் பிறகு தொடர்ந்து ஏ.வி.எம் திரைப்படங்களில் மீண்டும் டப்பிங் பேச துவங்கி இருக்கிறார் அனுராதா. இப்படி கமல் படத்தின் மூலமாக சென்ற வாய்ப்பு திரும்ப ரஜினி திரைப்படத்தின் மூலமாக அவருக்கு கிடைத்திருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top