திறமை இருக்குறவனுக்கு மட்டும்தான் வாய்ப்பு எல்லாம்!.. பாக்கியராஜை நேரடியாக திட்டிய வாலி…
Director bhagyaraj: இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பாக்கியராஜிற்கு அப்போது சினிமாவில் ஆதரவு கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜாதான்.
பாரதிராஜாவின் உதவியால்தான் பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார். எனவே வரும் புது முகங்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்தார் பாக்கியராஜ். அப்படி பாக்கியராஜின் உதவியால் பார்த்திபன், பாண்டியராஜன், லிவிங்க்ஸ்டன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் கால் பதித்தனர்.

அதே போல பாடலாசிரியர்களுக்கும் கூட பாக்கியராஜ் அதிகமாக வாய்ப்பு கொடுத்தார். இந்த நிலையில் ஒரு பாடலாசிரியரால் பெரும் அவதிக்குள்ளான சம்பவமும் நடந்துள்ளது. ஒரு பாடலாசிரியர் பாக்கியராஜிடம் வாய்ப்பு தேடி வந்ததை அடுத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் பாக்கியராஜ்.
ஆனால் பாதிக்கு மேல் அவருக்கு பாட்டுக்கு வரிகள் எழுத வரவில்லை. எனவே அவரை அனுப்பிவிட்டு மிச்ச பாடல்களுக்கு வாலியை வரிகள் எழுத அழைத்துள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட வாலி நேரே பாக்கியராஜிடம் சென்று திட்ட துவங்கிவிட்டார்.
திறமை உள்ளவர்களுக்கு நீ வாய்ப்பு கொடுக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் திரைப்படங்களுக்கு பாடல் வரிகளே எழுத தகுதி இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதே. இப்போது நான் இருக்கிறேன் அதனால் பிரச்சனையில்லை.
ஆனால் நான் இல்லை என்றால் எப்படி சமாளித்திருப்பாய். என்று திட்டியுள்ளார். அது முதல் பாக்கியராஜ் புது பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை.