Latest News
மனைவிக்கு செ$ஸ் டார்ச்சர் கொடுத்த அமெரிக்க முன்னாள் அதிபர்!.. பிரச்சனையை கிளப்பிய திரைப்படம்..!
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்து வந்த டொனால்ட் ட்ரம்ப் குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக வெளியான அப்ரண்டிஸ் திரைப்படம்தான் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அமெரிக்காவில் பெரும் தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் இருந்து வருபவர் டொனால்ட் ட்ரம்ப். இவானா மேரி என்கிற பெண்ணை இவர் 1977 இல் திருமணம் செய்திருந்தார். பிறகு 1990 இல் இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து உண்டானது.
இந்த நிலையில் 1970களில் ட்ரம்பின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை மையமாக வைத்து ’த அப்ரண்டிஸ்’ என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டது. அதில் ட்ரம்ப் 80களில் அவருடைய மனைவியாக இருந்த இவானாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஈரானிய இயக்குனர் அலி அப்பாசி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை மரியா பகலோவா ட்ரம்பின் முதல் மனைவி இவானாவாக நடித்துள்ளார். இளம் ட்ரம்பாக செபாஸ்டியன் ஸ்டான் நடித்துள்ளார். ஜெரிமி ஸ்ட்ராங் என்னும் நடிகர்தான் வக்கீல் ராய் கோனாக நடித்திருந்தார். இந்த நிலையில் அந்த திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அடுத்து அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சார்த்தில் ட்ரம்ப் ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் அவரது ஓட்டு வங்கியில் பிரச்சனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க போவதாக டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங்கை கூறியுள்ளார்.