News
சிவா சிவா அடிக்காத சிவா – எஸ்.ஜே சூர்யாவை சிரிக்க வைத்த வீடியோ
தமிழ் திரையுலகில் வித்தியாசமான இயக்குனர் என பெயர் வாங்கிய ஒருவர் எஸ்.ஜே சூர்யா, இவர் இயக்கும் திரைப்படங்கள் மற்றும் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். நியு, அன்பே ஆருயிரே, வியாபாரி என பல படங்கள் அதில் அடங்கும்.

தற்சமயம் வெளியான மாநாடு, டான் திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. இதனால் தற்சமயம் அதிக சினிமா வாய்ப்புகளை இவர் பெற்று வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா சிரிக்கும் எமோஜியை போட்டு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாம் மொபைல் பயன்படுத்தும்போது சில சமயங்களில் இணைய வேகமானது மிகவும் குறைவாக ஆகிவிடும். அப்போது ஏரோப்ளேன் மோடில் போட்டு திரும்ப சகஜ நிலைக்கு கொண்டு வரும்போது இணைய வேகம் சற்று அதிகரித்திருக்கும். அதை எஸ்.ஜே சூர்யா வீடியோவுடன் மெர்ஜ் செய்து நகைச்சுவை வீடியோவை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
அன்பே ஆருயிரே திரைப்படத்தில் கதாநாயகியின் தோழனை எஸ்.ஜே சூர்யா அடிப்பது போன்ற காட்சி வரும். அந்த காட்சியை இந்த கண்டென்ட்க்கு பயன்படுத்தி எஸ்.ஜே சூர்யாவையே ரசிக்க வைத்துள்ளனர் நமது மீம் க்ரியேட்டர்கள்.
