Bigg Boss Tamil
லூசு மாதிரி வந்து கேள்வி கேக்குற பாரு – தனலெட்சுமியை வம்பிழுத்த மகேஷ்வரி
விஜய் டிவியில் துவங்கி இரண்டே நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. முன்னர் எல்லாம் பிக் பாஸில் அதிகம் திரை நட்சத்திரங்களே இருப்பர். ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

ஜனனி, ஜி.பி முத்து போன்ற போட்டியாளர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. தற்சமயம் பிக் பாஸில் சமைப்பதற்கு ஒரு அணி, பாத்திரம் கழுவ ஒரு அணி, சுத்தம் செய்ய ஒரு அணி என போட்டியாளர்கள் அனைவரும் அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
சமைப்பதற்கான அணிதான் இதில் அதிகமாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணவுகள் பிடிக்கின்றன. ஆனால் சமையல் அணியில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒரு உணவை சமைக்க முடியாது அல்லவா?.
இந்நிலையில் இன்றைய பிக் பாஸில் சமையல் மகேஷ்வரி சமைக்கும் குழுவில் இருக்கிறார். அவரிடம் சென்ற தனலெட்சுமி என்ன குழம்பு என கேட்க, அவர் அதற்கு சாம்பார் என கூறியுள்ளார். ஆனால் தனலெட்சுமி தனக்கு சாம்பார் பிடிக்காது என கூறியுள்ளார். லூசு மாதிரி வந்து கேக்காத.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாப்பாடு செய்ய முடியாது என முகத்தில் அறைந்தால் போல கூறியுள்ளார் மகேஷ்வரி.
இதனால் இவர்கள் இருவருக்கும் சண்டை கிளம்பியுள்ளது. “அதுசரி பிக் பாஸ் நல்லா போனாதான அதிசயம்” என நெட்டிசன்கள் இந்த நிகழ்வை கிண்டலடித்து வருகின்றனர்.
