Connect with us

திரும்ப திரும்ப விதிமீறல் செய்யும் சிவகார்த்திகேயன்.. கோபத்தில் இருக்கும் தயாரிப்பாளர் சங்கம்!..

sivakarthikeyan

News

திரும்ப திரும்ப விதிமீறல் செய்யும் சிவகார்த்திகேயன்.. கோபத்தில் இருக்கும் தயாரிப்பாளர் சங்கம்!..

Social Media Bar

Sivakarthikeyan : எப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறினாரோ அப்போது முதலே தயாரிப்பாளர்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று கூறவேண்டும். அந்த அளவிற்கு எப்போதுமே பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.

சீமராஜா போன்ற திரைப்படங்களை எடுத்த பொழுது சில தயாரிப்பாளர்களிடம் கடன் வாங்கிதான் திரைப்படங்களை தயாரித்து வந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றியை கொடுக்காத காரணத்தினால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாத சூழல் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டது.

அடுத்தடுத்து தயாரிக்கும் திரைப்படங்களை எப்படியாவது வெற்றி அடைய செய்து அதன் மூலமாக தயாரிப்பாளர்களின் கடன்களை அடைக்கலாம் என்று அவர் நினைத்தார். இந்த நிலையில் தற்சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்டிருக்கும் விதிமுறை ஒன்றை சிவகார்த்திகேயன் மீறி இருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அயலான் திரைப்படம் வெளியாக இருந்த சமயத்தில் மற்ற தயாரிப்பாளர்கள் செய்வது போலவே செய்தித்தாள்களில் படத்தை விளம்பரப்படுத்தினார் சிவகார்த்திகேயன். ஆனால் செய்தித்தாளில் படத்தை விளம்பரப்படுத்துவதில் சில விதிமுறைகள் உண்டு .அதாவது ஒரு பக்கத்திற்கு முழுமையாக படத்தின் போஸ்டரை விளம்பரப்படுத்தக் கூடாது.

அது சின்ன தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விதிமுறை போடப்பட்டுள்ளது. எனவே அனைத்து போஸ்டர்களையும் ஒரே அளவில் தான் விளம்பரத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு ஒரு பக்க அளவிலான போஸ்டரை விளம்பரம் செய்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் சங்கம் அதிருப்தியில் உள்ளது. இதற்கு மட்டும் சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்.

அப்படி என்றால் சிவகார்த்திகேயனிடம் நிறைய பணம் இருக்கிறது அதனால் தான் இப்படி விளம்பரத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்கிறார். ஆனால் கடன் வாங்கிய தொகையை மட்டும் திரும்ப தர மாட்டார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சி எழ துவங்கியுள்ளன.

To Top