Cinema History
என் பாட்டு ஒரு தாயை காப்பாத்தியிருக்கு.. என்ன போய் தப்பா பேசுறாங்க.! – வாலிக்கு நடந்த நிகழ்வு..
தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் கவிஞர், பாடலாசிரியர் என அறியப்படுபவர் கவிஞர் வாலி. வாலி பாடல் வரிகள் எழுதிய பல பாடல்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன.
எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்திலேயே வாலி தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகிவிட்டார் எம்ஜிஆர் படங்களில் பல பாடல்களுக்கு வாலி பாடல் வரிகளை எழுதியுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்ப்பெற்ற கவிஞராக வாலி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கவிஞர்களை பொறுத்தவரை காதல் பாடல்களை எழுதும்போது பெண்களை உருவகப்படுத்த சில ஆபாச வருணனைகளை பாடல் வரிகள் வழியே விளக்குவதுண்டு. கவிஞர் வாலியும் கூட அப்படியான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இதனால் ஒரு காலக்கட்டத்தில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார் வாலி. அவரது காதுப்படவே பலரும் அவரை அவதூறு பேசினர்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் வாலி இதற்கு பதிலளிக்கும்போது “நான் ஆபாச வரிகளை எழுதினேன் என பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. ஒரு பாடலாசிரியர் இயக்குனர் கேட்பது போலதான் பாடல்களை வழங்க முடியும். நம் இஷ்டத்திற்கு பாடல் வரிகளை எழுத முடியாது. அதே போல நான் எவ்வளவோ கருத்துள்ள பாடல்களை எழுதியுள்ளேன்.
எத்தனை எம்.ஜி.ஆர் பாடலுக்கு நான் நல்ல கருத்துள்ள பாடல் வரிகளை எழுதியுள்ளேன். எம்.ஜி.ஆரின் ரசிகர் ஒருவர் நான் தாய்க்கு எழுதிய பாடல் வரிகளை கேட்டுவிட்டு, வெளியே விரட்டிவிட்ட தாயை மறுபடி அழைத்து வந்து வீட்டில் சேர்த்துக்கொண்டான். அதை போல நீங்களும் நல்ல பாடல்களை கேட்டு நல்லதை செய்யுங்களேன்” என விவரித்திருந்தார் வாலி.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்