Connect with us

அந்த பாட்டு கண்ணதாசன் எழுதுனாதான் நல்லா இருக்கும்!.. ஒரே பாட்டில் சிவாஜி போட்ட சண்டையை சரி செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..

kannadasan sivaji ganesan

Cinema History

அந்த பாட்டு கண்ணதாசன் எழுதுனாதான் நல்லா இருக்கும்!.. ஒரே பாட்டில் சிவாஜி போட்ட சண்டையை சரி செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..

Social Media Bar

Kannadasan and Sivaji ganesan :  சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் நடிப்பில் எப்படி சிவாஜி கணேசன் பெரும் உயரத்தை தொட்ட ஒரு பிரபலமாக இருந்தாரோ அதேபோல பாடல் வரிகளை எழுதுவதில் பெரும் பிரபலமாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசனை பொருத்தவரை அவருக்கும் மற்ற பிரபலங்களுக்கும் இடையே ஆடிக்கடி பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும் அப்படி சிவாஜி கணேசனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையேயும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை என்கிற ரீதியில் அந்த பிரச்சனை பெரிதாகியது. இதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் தான் நடிக்கும் எந்த திரைப்படத்திற்கும் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதக்கூடாது என பகிரங்கமாக கூறிவிட்டார்.

sivaji 1
sivaji 1

இந்த நிலையில் சிவாஜி கணேசன் மாற்றுத்திறனாளியாக நடித்து பாகப்பிரிவினை (Bhagapirivinai) என்கிற திரைப்படம் வெளியானது. அதில் சிவாஜிகணேசன் மிகவும் சோகமாக தனது மகனை பார்த்து பாடுவது போன்ற சூழ்நிலையில் ஒரு பாட்டு அமைய வேண்டும்.

அதற்கான பாடல் வரிகளை எழுத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை வர வைத்திருந்தனர். அந்த சூழ்நிலையை கேட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த சூழ்நிலைக்கு என்னை விட கண்ணதாசனால்தான் சிறப்பாக பாடல் வரிகளை எழுத முடியும் என்று கூறினார்.

உண்மையில் அந்த சூழ்நிலைக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தால் பாடல் வரி எழுத முடியும் ஆனாலும் கண்ணதாசனுக்கும் சிவாஜி கணேசனுக்கும் இருந்த சண்டையை சரி செய்வதற்காக இப்படி ஒரு விஷயத்தை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் செய்தார்.

உடனே வேறு வழியில்லாமல் படக்குழுவினரும் கண்ணதாசனிடம் சென்று பாடல் வரியை எழுதிக் கேட்டனர். சிவாஜியின் விருப்பத்துடன்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்று படக்குழுவினர் சொன்ன பிறகுதான் என் பிறந்தாய் மகனே என் பிறந்தாய் என்கிற பாடலுக்கான வரிகளை எழுதி கொடுத்தார் கண்ணதாசன்.

அந்தப் பாடலைக் கேட்ட பிறகு சிவாஜி கணேசன் மிகவும் வியந்து போனார் உடனே அவர் நேரடியாக கண்ணதாசனிடம் சென்று சந்தித்து அவரை கட்டிப்பிடித்து உங்களிடம் நான் சண்டை போட்டிருக்க கூடாது என்று கூறினார். அந்த அளவிற்கு அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்த பாடலாக அந்த பாடல் அமைந்திருந்தது.

To Top