Connect with us

ராஜ்கிரண் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் எழுதிய பாடல்!.. கண் கலங்கிய ராஜ்கிரண்!.. எந்த பாட்டு தெரியுமா?

rajkiran

Cinema History

ராஜ்கிரண் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் எழுதிய பாடல்!.. கண் கலங்கிய ராஜ்கிரண்!.. எந்த பாட்டு தெரியுமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து பிறகு இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக என அனைத்து துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் ராஜ்கிரண்.  உழைக்கும் வர்க்கத்தில் உடல் அமைப்போடு கிராமத்து பாஷையோடு சினிமாவிற்கு வந்ததால் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

முக்கியமாக பாமர மக்கள் அவரை ஒரு கதாநாயகனாக கொண்டாட தொடங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தார் ராஜ்கிரண். அதில் சில திரைப்படங்கள் அவரே தயாரித்தவை. அரண்மனைக்கிளி திரைப்படத்தைப் பொறுத்தவரை அவரே இயக்கி தயாரித்து நடித்த திரைப்படம் ஆகும். அந்த திரைப்படம் கொடுத்த வெற்றிதான் முக்கியமாக ராஜ்கிரனுக்கு தமிழ் சினிமாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ராஜ்கிரன் கதாநாயகனாக நடித்த படங்களை விடவும் அப்பாவாக நடித்த திரைப்படங்கள் தான் தற்கால தலைமுறையினருக்கு ராஜ்கிரனை அறிமுகப்படுத்திய திரைப்படங்கள் என கூறலாம். இந்த நிலையில் அவர் நடித்த திரைப்படத்தில் முக்கியமான திரைப்படம் தவமாய் தவமிருந்து.

பார்ப்பதற்கு சேரனின் வாழ்க்கையை கூறுவது போன்ற படமாக தெரிந்தாலும் உண்மையில் அந்த படத்தின் கதாநாயகன் ராஜ்கிரண்தான் ராஜ்கிரணின் இளமை காலங்களில் துவங்கி அவரின் இறப்பு வரையில் உள்ள கதையை பேசும் படம்தான் தவமாய் தவமிருந்து.

அதில் ஒரே ஒரு ஊருக்குள்ள என்கிற ஒரு பாடல் மிகப் பிரபலமான பாட்டாகும். அந்த பாடலில் வரும் வரிகள் ராஜ்கிரணின் வாழ்க்கையை குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டிருந்தன. ராஜ்கிரண் சிறுவயதில் இருந்து இளமை காலங்கள் வரையிலும் தனது தாயால்தான் வளர்க்கப்பட்டார்.

அப்படி வளர்க்கப்படும் பொழுது கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத வகையில் வளர்க்கப்பட்ட ராஜ்கிரண் முதன்முதலாக சென்னைக்கு வேலை தேடி வரும் பொழுதுதான் தான் ஏழை என்பதும் கஷ்டம் என்றால் என்ன என்பதையும் ராஜ்கிரண் அறிந்தார்.

அதை விளக்கும் வகையில் ஒரே ஒரு ஊருக்குள்ள என்கிற அந்தப் பாடலில் “செல்லம் ரொம்ப கொடுத்ததால வறுமை தெரியவில்லை” என பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. அந்த பாடல் வரிகளை முதல் முறை கேட்ட பொழுது ராஜ்கிரண் அழுதுவிட்டார் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவிற்கு அவரது உண்மை வாழ்க்கையை விளக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன.

To Top