Special Articles
தீவிரவாதிகள் படத்திலும் ஒரு செம கதை வைக்கலாம் என எடுத்த 5 தமிழ் திரைப்படங்கள்!..
சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை வைத்து படம் எடுக்கப்பட்டு அது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல முக்கிய கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படங்களாக அமைந்திருக்கும்.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் வரலாற்று நிகழ்வுகள், தேச தலைவர்கள், உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படங்கள், குறிப்பிட்ட மனிதனின் சுயசரிதை, கடவுள் படங்கள், பேய் படங்கள் உள்ளிட்ட கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு அது ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தீவிரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்திலும் ஒரு கதை வைத்து அது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படங்களாக அமைந்திருக்கும் தற்போது இந்த படத்தின் பட்டியல்களை காணலாம்.
கவண் 2017
நடிகர் விஜய் சேதுபதி மடோனா சபாஸ்டியன், டி ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் கவண். மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சத்துடன் ஒரு தனியார் சேனலில் வேலையில் சேர்கிறார் விஜய் சேதுபதி. மற்றொரு புறம் அரசியல்வாதியாக போஸ் வெங்கட் நடிக்க அதில் அவர் வைத்திருக்கும் தொழிற்சாலையின் கழிவுகள் அந்த பகுதியில் உள்ள குடிநீரில் கலந்து அதற்கு எதிரான போராட்டத்தை வழிப்படுத்துகிறார்கள் விக்ராந்த் மற்றும் அவரது தோழி.
போராட்டத்தை திசை திருப்பும் விதமாக விக்கிரனின் தோழியை போஸ் வெங்கட் கொடுமைப்படுத்த. மருத்துவமனையில் விஜய் சேதுபதியும் மரணமும் நேரில் சந்தித்து வீடியோ பேட்டி ஒன்று எடுத்து சேனலில் வெளியிடுகின்றன.
இதனால் போஸ் வெங்கட் அந்த சேனலின் உரிமையாளர் ஆகஷ் தீப்புடன் டீல் பேசி அந்த பேட்டியை மாற்றி விடுகிறார். ஆனால் விஜய் சேதுபதிக்கு இது பிடிக்காமல் தொலைக்காட்சி உரிமையாளருடன் சண்டை போட்டு சேனலில் இருந்து அவரும், அவருடைய நண்பர்களும் வெளியேறுகிறார்கள்.
அதன் பிறகு டி ராஜேந்திரன் நடத்தும் ஒரு சின்ன சேனலில் வேலையில் சேர்கிறார்கள். அந்த சேனலில் இருந்து கொண்டு ஆகாஷ் நடத்தும் டிஆர்பி யில் நம்பர் ஒன்றாக இருக்கும் சேனலை இந்த சின்ன சேனலில் வேலை செய்து கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி எவ்வாறு வீழ்த்துகிறார் என்பதும், சிறுபான்மை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ஊடகங்களை பற்றி இந்த படம் பேசுவது போன்று படத்தின் மீதி கதை அமைந்திருக்கும்.
தசாவதாரம் 2008
நடிகர் கமல் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். இந்த படத்தில் 10 பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் அடைந்தார் கமல். அமெரிக்கா நிறுவனம் ஒன்றில் உயிரி தொழில்நுட்ப அறிவியலாளர்களால் கண்டுபிடித்த உயிரி பேரழிவு கிருமியை கெட்டவர்களுக்கு கைமாற்றும் தருவாயில் அதனை எடுத்துக்கொண்டு படத்தின் கதாநாயகன் ஓடுகிறார்.
படத்தின் கதாநாயகன் அறிவியலாளராக இருக்கும் தருவாயில், அவரிடம் உள்ள அந்த உயிரி அழிவு கிருமியை எடுக்க சி ஐ ஏ அமைப்பின் ஒரு ஊழியரை தீவிரவாதிகள் அனுப்புகிறார்கள்.
படத்தின் கதாநாயகன் அந்த கிருமியை எடுத்துக் கொண்டு ஓடும் வேளையில் அதை தவற விடுகிறார். கடைசியில் அதை கைப்பற்றினாரா மேலும் 2024 சுனாமிக்கும் அந்த கிருமிக்கும் என்ன தொடர்பு என்பதை படத்தின் கதை ஆகும்.
வானம் 2011
இந்த படம் நடிகர் சிம்பு, அனுஷ்கா, ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த படம் வழக்கமான தமிழ் திரைப்படங்களைப் போல் அல்லாமல் ஐந்து வெவ்வேறு தளங்களில் நடக்கும் கதைகளை கடைசியில் ஒரு புள்ளியில் இணைக்கின்றன.
சிம்புவின் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களும், பரத், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் வெவ்வேறு சம்பவங்களும் இறுதியாக ஒரு புள்ளியில் அமைகிறது. இந்த ஐந்து கதாபாத்திரங்களும் மருத்துவமனையில் சந்திக்கிறார்கள்.
அப்போது பயங்கரவாத தலைவர் மன்சூர் காணும் அவனது கும்பலும் மருத்துவமனையில் உள்ள அனைவரையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். இந்த பயங்கரவாத கும்பலில் இருந்து அவர்கள் எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.
ரோஜா 1992
மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி ,மதுபாலா நடித்த திரைப்படம் ரோஜா. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் பல விருதுகளையும் வென்றிருக்கிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒரு ரகசிய பணியின் போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தனது கணவரை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய பெண்ணின் கதையாக இந்த படம் அமைந்திருக்கிறது. தீவிரவாத தாக்குதல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச பார்வைகளுக்காக இப்படம் மீண்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கன்னத்தில் முத்தமிட்டால் 2002
மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2022 இல் வெளியான தமிழ் திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த படத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடித்திருந்தார்கள். இலங்கையில் நந்திதாஸ் தன்னுடைய கணவருடன் வசித்து வருகிறார். அப்போது போர் நடக்கும் எச்சரிக்கை வருகிறது. இதனால் அனைவரும் படகு ஏறி ராமேஸ்வரம் வருகிறார்கள். ஆனால் தன்னுடைய கணவர் இலங்கை ராணுவத்திடம் மாட்டிக் கொள்வதால், தன் கணவனை அழைத்துச் செல்ல முடியாத அவள் தனியாக செல்கிறாள்.
ராமேஸ்வர அகதிகள் முகாமில் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த பெண் குழந்தையை மாதவன், சிம்பரன் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அந்த பெண் குழந்தை வளர்ந்த பிறகு தத்தெடுக்கப்பட்ட விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது.
இதனால் என்னுடைய பெற்றோரை காண வேண்டும் என அந்தப் பெண் குழந்தை கேட்க மாதவனும் சிம்ரனும் அவளின் பெற்றோரை காண இலங்கை செல்கிறார்கள். அங்கு சென்றதும் அவளின் தாய் விடுதலைப் புலி போராளி என தெரிய வருகிறது. தன்னுடைய அம்மாவை அந்த குழந்தை தமிழகத்திற்கு வர சொல்கிறாள் ஆனால் தாய் மறுத்து விடுகிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்