அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..
நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார்.
கார் ரேஸில் கலந்து கொள்ளும் சமயங்களில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அதே போல திரைப்படங்களில் நடிக்கும் சமயங்களில் கார் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் கார் ரேஸில் கலந்து கொள்ளும் பொழுது அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அந்த மாதிரி ஏற்பட்டால் படப்பிடிப்புகளில் அது பிரச்சனையை ஏற்படுத்தும் படப்பிடிப்பு முடிவதிலும் தாமதமாகும் என தயாரிப்பாளர் நலனை கருத்தில் கொண்டு அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.
ஏனெனில் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறார் அஜித்.
இந்த படத்தை எடுப்பதற்கு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்து இருக்கிறார் அஜித். அந்த வகையில் அக்டோபர் மாதம் துவங்கும் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அவருக்கு கூறப்பட்டுள்ளது.
எனவே முதலில் அஜித்துக்கான காட்சிகளை மட்டும் மூன்று மாதத்திற்குள் எடுத்துவிட்டு மீத காட்சிகளை தாமதமாக எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.