Connect with us

அரபு போன அத்தனை தொழிலாளிக்கும் சமர்பணம்!.. விஜய் அஜித்தை ஓவர்டேக் செய்த ப்ரித்திவ்ராஜ் – ஆடுஜீவதம் trailer!. கதை இதுதான்!.

aadujeevitham

News

அரபு போன அத்தனை தொழிலாளிக்கும் சமர்பணம்!.. விஜய் அஜித்தை ஓவர்டேக் செய்த ப்ரித்திவ்ராஜ் – ஆடுஜீவதம் trailer!. கதை இதுதான்!.

Social Media Bar

Aadu jeevitham: வெகு காலங்களாகவே தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது என்பது கிராமபுரங்களில் வாடிக்கையாக இருந்து வரும் விஷயங்களாக இருந்து வருகின்றன. ஆனால் அப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பெரும்பான்மையான மக்களுக்கு அதிகமான வேலைகள் கொடுக்கப்படுகின்றன.

சிலருக்கு இங்கு சொல்லும் வேலைகள் அங்கு கொடுக்கப்படுவதில்லை அப்படியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்தான் ஆடு ஜீவிதம் இந்த நாவலை பின்புறமாகக் கொண்டு தற்சமயம் பிரித்திவிராஜ் அதை திரைப்படமாக நடித்து வருகிறார்.

தற்சமயம் ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது இந்த திரைப்படம் உருவாக்கப்படும் பொழுதே பேன் இந்தியா திரைப்படமாகத்தான் உருவாக்கப்பட்டது. படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிகாட்டி இருக்கிறார் பிரித்திவிராஜ்.

படத்தின் கதை:

மேலும் தயாரிப்பு வழியாகவும் திரைப்படம் சிறப்பான ஒரு படமாக அமைந்திருக்கிறது. விஜய் அஜித் திரைப்படங்களை விட ஆடு ஜீவிதம் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரேபிய நாட்டிற்கு வேலை தேடி செல்லும் பல இளைஞர்களில் ஒருவராக பிரித்விராஜும் செல்கிறார்.

ஆனால் அனுப்பும் ஏஜெண்டுகள் அவருக்கு என்ன வேலை சொன்னார்களோ அந்த வேலை அவருக்கு போன இடத்தில் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை அவருக்கு கொடுக்கப்படுகிறது.

இதனால் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் ப்ரித்திவிராஜ் அங்கிருந்து எப்படி தப்பித்து வருகிறார் என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. உண்மையிலேயே இங்கிருந்து செல்லும் பல இளைஞர்களுக்கு இப்படியான கொடுமைகள் தொடர்ந்து வெளிநாடுகளில் நடந்து வருகின்றன. அதனை பதிவு செய்யும் விதமாக இந்த படம் இருப்பதால் வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் உணர்வு ரீதியாக தொடர்புடைய படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top