News
இவ்வளவு பெரிய ரசிக பட்டாளம் இருந்தும் டீ கிடைக்காமல் அவதிப்பட்ட அஜித்!.. வெறுப்பேத்திய தயாரிப்பாளர்கள்!.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்ட நடிகர் என்றாலும் கூட அவருக்கு மிகவும் சிம்பிளாக இருக்கதான் அதிகமாக பிடிக்கும். அதனாலயே பெரும்பாலும் திரைப்பட நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துக்கொள்ள மாட்டார் அஜித்.
நடிப்பதை தவிர்த்து பிரபலமாவதற்காக இந்த விஷயங்களை செய்ய வேண்டும் என எதையும் அஜித் செய்ய மாட்டார். ஆனாலும் ரசிகர்கள் எப்போதும் அஜித் மீது அளவுக்கடந்த அன்பு கொண்டுள்ளனர். அதே சமயம் திரைத்துறையில் உள்ளவர்கள் கூறும்போது அஜித் அனைவருடனும் சகஜமாக பழக கூடியவர் என கூறுகின்றனர்.

ஆடுகளம் நரேன் ஒரு பேட்டியில் கூறும்போது அஜித் என்னிடம் சகஜமாக பழகுவார். எப்போதும் ஏதாவது பேசி கொண்டே இருப்போம். அவரது ஓய்வு வாகனத்தில் அவர் தங்கி நான் பார்த்தது கிடையாது. இடைவேளை நேரத்தில் எங்களுடன் தான் அவர் பேசிக்கொண்டிருப்பார் என்றார் ஆடுகளம் நரேன்.
இப்படிதான் ஒரு நாள் சுற்றி முற்றி ஆள் இருக்கிறார்களா என பார்த்துவிட்டு வேகமாக சென்று வேலையாட்களுக்கு இருக்கும் டீயில் ஒரு கப் ஊற்றி கொண்டுவந்து குடித்து கொண்டிருந்தார். ஏன் சார் இந்த டீயை குடிக்கிறீர்கள் என கேட்டப்போது டீ என்று கேட்டாலே நிறைய டிக்காசம் போட்டு நிறைய சர்க்கரை போட்டு ஒரு டீயை கொடுக்கிறார்கள்.
அந்த மாதிரி திக்காக இருக்கும் டீயே எனக்கு குடிக்க பிடிக்காது. இந்த மாதிரி தண்ணியாக இருக்கும் டீதான் பிடிக்கும் என சகஜமாக கூறியுள்ளார் அஜித்.
