அப்பாஸ் தவறவிட்ட 2 முக்கிய படங்கள்… அதுல மட்டும் நடிச்சிருந்தா வேற லெவலுக்கு போயிருப்பார்!..

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் முதல் படத்திலேயே பெரும் உயரத்தை தொடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சில நடிகர்களுக்கு மட்டுமே அப்படியான விஷயங்கள் தமிழ் சினிமாவில் சாத்தியமாகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பெரும் ஹிட் கொடுத்து அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு நடிகர் அப்பாஸ்.

1996 இல் வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அப்பாஸ். அந்த முதல் படமே அவரை பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றது அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற துவங்கினார் நடிகர் அப்பாஸ்.

Social Media Bar

அப்போது அவர் செய்த ஒரு பெரும் பிழைதான் பிறகு அவர் சினிமாவில் தொடர்ந்து இருக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்பாஸ்க்கு அதிக பட வாய்ப்புகள் வர துவங்கியதும் அவரும் வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டார்.

நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு பதிலாக அனைத்து கதைகளிலும் நடிக்க தொடங்கினார். அதில் தொடர்ந்து 18 படங்களில் கமிட்டானார் அப்பாஸ். அந்த சமயத்தில் அவருக்கு இரண்டு முக்கிய படங்களுக்கான வாய்ப்பு கிடைத்தும் இந்த 18 படங்களில் கமிட்டாகி இருந்ததனால் அதில் நடிக்க முடியாமல் போனது.

அதில் ஒரு படம் காதலுக்கு மரியாதை. காதலுக்கு மரியாதை திரைப்படம் விஜய்க்கு ரொம்ப முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தில் ஒருவேளை அப்பாஸ் நடித்திருந்தால் அவரை அது வேற லெவலுக்கு கொண்டு சென்று இருக்கும்.

அதேபோல அடுத்து அப்பாஸ் மறுத்த திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கிய ஜீன்ஸ் திரைப்படம். ஜீன்ஸ் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் நடிகர் பிரசாந்துக்கு பெரும் மார்க்கெட்டைப் பெற்றுக் கொடுத்தது. ஒருவேளை இந்த இரண்டு படங்களிலும் அப்பாஸ் நடித்திருந்தால் இப்பொழுது அவரும் பெரிய கதாநாயகனாக இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும்.