அப்துல்கலாமை வைத்து படம் எடுக்க முயற்சி செய்த பிரபலம்!.. அது மட்டும் நடந்திருந்தா!..

இந்தியாவில் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது என்பது பல காலங்களாக நடந்து வரும் விஷயம்தான். காந்தி, காமராஜர், அம்பேத்கர், பெரியார் மாதிரியான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படமாக பார்க்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து இந்திய அளவில் முக்கியமான நபராக மாறிய டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் வாழ்க்கையை இப்போதுவரை யாரும் படமாக்கவில்லை.

அதை அப்துல்கலாம் உயிரோடு இருக்கும்போதே படமாக்க முயற்சி செய்தவர்தான் நடிகர் யுகி சேது. இவர் ரமணா மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்துல்கலாம் விஞ்ஞானியாக இருந்தப்போதே அவர் மீது பேரன்பு கொண்டிருந்தார் யுகி சேது.

Social Media Bar

எனவே அவரை வைத்து ஒரு ஆவணப்படத்தை எடுக்க யுகி சேது முடிவு செய்தார். ஆனால் அதற்கு அப்துல்கலாம் மறுத்துவிட்டார். என்னை மாதிரியான சாதாரண ஆட்களை வைத்து எதற்கு இந்த மாதிரி ஆவண படமெல்லாம் என மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் குடியரசு தலைவராக ஆன பிறகு மீண்டும் அவரை சந்தித்தார் யுகி சேது. இப்போது நீங்கள் சாதாரண ஆள் கிடையாது. நீங்கள்தான் இந்தியாவின் முதல் குடிமகன் இப்போவாவது ஆவணப்படம் எடுக்க அனுமதி கொடுங்க என கேட்டுள்ளார் யுகி சேது.

ஆனால் அப்போதும் அப்துல்கலாம் இப்போதும் நான் சாதாரண ஆள்தான் தம்பி என கூறியுள்ளார். அப்போது மட்டும் அப்துல்கலாம் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் அவரை பற்றிய சிறப்பான ஆவணப்படத்தை பார்த்திருக்க முடியும்.