Connect with us

தல அஜித்-க்கு ஹார்ட் செக் அப்? மருத்துவமனைக்கு சென்றதன் காரணம் இது தான்! 

Ajith-in-hospital

News

தல அஜித்-க்கு ஹார்ட் செக் அப்? மருத்துவமனைக்கு சென்றதன் காரணம் இது தான்! 

Social Media Bar

நடிகர் அஜித் திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு ஹார்ட்டுக்கான பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் வெளியான தகவல்கள் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கியுள்ளது. 

இட்டிஹ்னால் பதறி போன தல ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.  சில மாதங்களுக்கு முன்பு இவருடைய நண்பர் இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். அதிலிருந்தே  அஜித்துக்கு ஒரு வித பயம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது ரசிகர்களை மேலும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த நிலையில், இது வழக்கமான பரிசோதனை தான் என்றும் உடனே வீடு திரும்பி விடுவார் என்றும் ஒரு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இது வழக்கமான மாஸ்டர் செக்கப் கிடையாதாம், ஹார்ட்டுக்கான பரிசோதனை என்றும் சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஜாலியாக பைக் ரைடு செல்ல தான் அஜித், பரிசோதனை செய்திருக்கிறார் என்று ஒரு தரப்பு கூறுகிறது. இந்த மாதம் 15 ஆம் தேதி விடாமுயற்சி சூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் ஆரம்பிக்கப்பட உள்ளதாம்.அதில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு பரிசோதனை செய்து விடலாம் என்று அஜித் அப்பல்லோவுக்கு சென்றிருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

எப்போதும்  சாகசம் செய்ய காத்திருக்கும் அஜித் தனது உடலை பராமரிக்க நினைப்பது ஒன்றும் ஆச்காரியத்திற்க்கு இல்லை. அதனாலேயே இந்த செக்கப் நடந்துள்ளது. மேலும் ,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்று  டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் எனவும் தகவல்கள் சொல்கிறது. 

இதில் எது உண்மையான காரணம் என்று தெரியவில்லை. ஆனால் அஜித் பூரண நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. 

To Top